பாடல் #35399
ஏழையைப்போல் வந்த
🔤 Aezhaiyaippol Vandha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழையைப்போல் வந்த ராசா - எங்க உள்ளத்திலே வாழும் மகராசா மரியின் மகனா நீங்க பொறக்கலாச்சு - எங்க மனதின் குறைகள் எல்லாம் பறந்தே போச்சு 1. திக்குத் தெரியாமலே அலைஞ்சோம் - ஒரு திசையும் தெரியாமலே திரிஞ்சோம் பாவமெனும் நடுக்கடலிலே தவிச்சே கிடந்தோம் அன்பின் கலங்கர விளக்கா இறைவா தோன்றினீரே 2. நெஞ்சத்தில நம்மதியத் தேடி - மனம் நெனச்சப்படி எங்கெங்கேயோ ஓடி நெருக்கப்பட்டு வாழ்க்கையில சேர்ந்தே போனோம் நெருங்கி எங்களை நாடி நானிலத்தில் வந்தீரய்யா 3. பட்டதெல்லாம் போதும் ஏசய்யா - நாங்க பட்டமரம் போலிருந்தோம் ஐயா கெட்டு நொந்துப் போயிருந்த எங்க வாழ்வை மாற்றி இன்பத்த அருள மகராசா வந்தீரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhaiyaippol Vandha Raasaa - Engga Ullatthilae Vaazhum Makaraasaa Mariyin Makanaa Neengga Porakkalaachsu - Engga Manathin Kuraigal Ellaam Paranthae Pochsu 1. Thikkuth Theriyaamalae Alainjsom - Oru Thisaiyum Theriyaamalae Thirinjsom Paavamenum Natukkatalilae Thavichsae Kidanthom Anpin Kalanggara Vilakkaa Iraivaa Thonrineerae 2. Nenjjatthila Nammathiyath Thaeti - Manam Nenacchappati Engkengkaeyo Oti Nerukkappattu Vaazhkkaiyila Saernthae Ponom Nerungki Enggalai Naati Naanilatthil Vantheerayyaa 3. Pattathellaam Pothum Aesayyaa - Naangga Pattamaram Polirunthom Aiyaa Kettu Nonthup Poyirundha Engga Vaazhvai Maarri Inbattha Arula Makaraasaa Vantheerayyaa