பாடல் #35394
ஏனிந்த நிலை எனக்கு
🔤 Aenindha Nilai Enakku
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏனிந்த நிலை எனக்கு என்னருந்தேவா நானிந்த நானிலத்தில் வாழ்ந்ததே போதும் ஓயாத துன்பம் போராட்டம் யாவும் ஒழிகின்ற நாள்தான் என்றோ என்தேவா 1. செத்தவனைப்போல் நினைத்து நித்தமெனை மறந்தார்கள் உடைந்த ஒரு பாத்திரம் போல் உதறியெனை எறிந்தார்கள் வீதியில் எனைக்கண்டு விலகியே சென்றார்கள் நானோ என் கர்த்தாவே உமை நம்பி வாழுகின்றேன் 2. நான் நம்பும் மனிதரெல்லாம் ஏன் என்னை பகைக்கின்றார் எனை முன்பு நடக்கவிட்டு எனைப் பார்த்து நகைக்கின்றார் மனதாலும் நினைவாலும் மனதார வெறுக்கின்றார் இருந்தாலும் உமைத்தேடி வந்த எனை நினைத்தருளும் 3. மறைவாக வைத்த வலை விரைவாக நீக்கிடுவீர் சத்துருவின் கையினின்று பக்தனெனை மீட்டிடுவீர் உபத்திரவம் வியாகுலமும் உன்னதரே மாற்றிடுவீர் என் நெருக்கம் அறிந்ததினால் உம் இரக்கம் காட்டிடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aenindha Nilai Enakku Ennarunthaevaa Naanindha Naanilatthil Vaazhndhathae Pothum Oyaadha Thunbam Poraattam Yaavum Ozhikindra Naalthaan Enro Enthaevaa 1. Setthavanaippol Ninaitthu Nitthamenai Maranthaarkal Utaindha Oru Paatthiram Pol Udhariyenai Erinthaarkal Veethiyil Enaikkantu Vilakiyae Senraarkal Naano En Kartthaavae Umai Nampi Vaazhukinraen 2. Naan Nampum Manidharellaam Aen Ennai Pakaikkinraar Enai Munpu Natakkavittu Enaip Paartthu Nakaikkinraar Manathaalum Ninaivaalum Manathaara Verukkinraar Irunthaalum Umaitthaeti Vandha Enai Ninaittharulum 3. Maraivaaga Vaittha Valai Viraivaaga Neekkituveer Satthuruvin Kaiyininru Pakthanenai Meettituveer Ubatthiravam Viyaakulamum Unnatharae Maarrituveer En Nerukkam Arindhathinaal Um Irakkam Kaattituveer