பாடல் #35393
நாங்க வேட்டையாடி
🔤 Naangga Vaettaiyaati
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாங்க வேட்டையாடி குருவி பிடிப்போம் கொக்கு பிடிப்போம் - நாங்க காட்டுக்கு போயி காடை பிடிப்போம் கவுதாரி பிடிப்போம் - அந்த இயேசு சாமி அன்பென்னும் வலையை விரிச்சாருங்க எங்களை பாசத்தோட அவருக்காக பிடிச்சாருங்க ஓ... சாமியோ... அரே ஓ... சாமியோ - இப்படி எப்பவும் நாங்க கத்திகிட்டேயே இருந்தோமுங்க - இப்ப ஏ... சாமியோ... எங்க இயேசு சாமியோ இப்படி கடைசி வரைக்கும் பாடிகிட்டேயே இருப்போமுங்க 1. நாங்க ஊசி மணியும் பாசி மணியும் விப்போமுங்க - நாங்க காசுக்காக நரிப்பல்லெல்லாம் வித்தோமுங்க அந்த இயேசு சாமி எங்களை தேடி வந்தாருங்க எங்க இதயத்தில் அவரு நிம்மதியாத்தான் தந்தாருங்க - ஓசாமியோ 2. நாங்க தெருதெருவாக சுத்திகிட்டே இருந்தோமுங்க நாங்க எருமையவெட்டி இரத்தத்தையெல்லாம் குடிச்சோமுங்க எங்க அருமையானவரு எங்க மேல அன்பை வச்சாருங்க - அவரு இரத்தத்தை சிந்தி எங்களையெல்லாம் மீட்டாருங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naangga Vaettaiyaati Kuruvi Pitippom Kokku Pitippom - Naangga Kaattukku Poyi Kaatai Pitippom Kavuthaari Pitippom - Andha Yesu Saami Anpennum Valaiyai Virichsaarungga Enggalai Paasatthoda Avarukkaaga Pitichsaarungga O... Saamiyo... Arae O... Saamiyo - Ippati Eppavum Naangga Katthikittaeyae Irunthomungga - Ippa Ae... Saamiyo... Engga Yesu Saamiyo Ippati Kataisi Varaikkum Paatikittaeyae Iruppomungga 1. Naangga Oosi Maniyum Paasi Maniyum Vippomungga - Naangga Kaasukkaaga Narippallellaam Vitthomungga Andha Yesu Saami Enggalai Thaeti Vanthaarungga Engga Idhayatthil Avaru Nimmathiyaatthaan Thanthaarungga - Osaamiyo 2. Naangga Therutheruvaaga Sutthikittae Irunthomungga Naangga Erumaiyavetti Ratthatthaiyellaam Kutichsomungga Engga Arumaiyaanavaru Engga Maela Anpai Vachsaarungga - Avaru Ratthatthai Sinthi Enggalaiyellaam Meettaarungga