பாடல் #35392
நீ என்னால் மறக்கப்படுவதில்லையென்று
🔤 Nee Ennaal Marakkappatuvathillaiyenru
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ என்னால் மறக்கப்படுவதில்லையென்று நீதி தேவன் வாக்களித்தாரே உன் முன்னால் என் சமூகம் செல்லும் என்று உண்மையுள்ள தேவன் சொன்னாரே அவர் சொன்ன வாக்கு மாறியதுமில்லை அவர் என்னை விட்டு விலகியதுமில்லை அவர் என்னை என்றும் கைவிட்டதுமில்லை ஆஹா அல்லேலூயா (4) 1. யாக்கோபே இஸ்ரவேலே - உன் பாவங்களை கொஞ்சம் நினைத்துப்பார் இருந்தாலும் நீ என் தாசன் நான்தான் உனை உருவாக்கிய தேவன் - அதனால் நீ என்னால் மறக்கப்படுவதில்லை 2. உன் தாயின் கர்ப்பத்திலே - உனை உருவாக்கிய தேவன் நானன்றோ உனக்குத் துணை செய்வதினால் உலகில் உனக்கு குறை எதுவும் உண்டோ - என்றும் நீ என்னால் மறக்கப்படுவதில்லை 3. இஸ்ரவேலின் ராஜா நான் - நல் சேனைகளின் கர்த்தர் உந்தன் மீட்பர் எனைத் தவிர தேவனுண்டோ வேறு ஒரு கன்மலையுமுண்டோ - என்றும் நீ என்னால் மறக்கப்படுவதில்லை 4. தாகமுள்ள யாவர் மேலும் - ஜீவத் தண்ணீரை ஊற்றும் நான்தானே வறண்ட நிலம் ஆறுகளாய் மாறச் செய்யும் வல்ல தேவன் நானே - என்றும் நீ என்னால் மறக்கப்படுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Ennaal Marakkappatuvathillaiyenru Neethi Devan Vaakkalitthaarae Un Munnaal En Samoogam Sellum Enru Unmaiyulla Devan Sonnaarae Avar Sonna Vaakku Maariyathumillai Avar Ennai Vittu Vilakiyathumillai Avar Ennai Enrum Kaivittathumillai Aahaa Allaelooyaa (4) 1. Yaakkopae Isravaelae - Un Paavanggalai Konjjam Ninaitthuppaar Irunthaalum Nee En Thaasan Naanthaan Unai Uruvaakkiya Devan - Adhanaal Nee Ennaal Marakkappatuvathillai 2. Un Thaayin Karppatthilae - Unai Uruvaakkiya Devan Naananro Unakkuth Thunai Seyvathinaal Ulakil Unakku Kurai Ethuvum Unto - Enrum Nee Ennaal Marakkappatuvathillai 3. Isravaelin Raajaa Naan - Nal Saenaigalin Kartthar Undhan Meetpar Enaith Thavira Devanunto Vaeru Oru Kanmalaiyumunto - Enrum Nee Ennaal Marakkappatuvathillai 4. Thaagamulla Yaavar Maelum - Jeevath Thanneerai Oorrum Naanthaanae Varanda Nilam Aarugalaay Maarach Seyyum Valla Devan Naanae - Enrum Nee Ennaal Marakkappatuvathillai