பாடல் #35390
ஆயிரம் இருந்தும் மரணத்தை
🔤 Aayiram Irunthum Maranatthai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொகையறா எல்லாம் மாயை என்று ஞானி சொன்ன வார்த்தை அன்று ஒரு போதும் பொய்யாய் போனதில்லை என்று வாழ்க்கையில் என்மனது கண்டதே இன்று வாழ்க்கையில் என்மனது கண்டதே இன்று ஆயிரம் இருந்தும் மரணத்தை தவிர்க்க அவணியில் எவருக்கும் உரிமையில்லை அந்த மரணத்தை எங்கள் இறைவன் படைக்கவில்லை ஆதி மனிதனின் பாவத்தினால் வந்த அகோர மரணமிது - அந்த 1. பத்து மாதம் சுமந்த அன்னையும் பாசத்தின் பிள்ளையை மறக்கின்றாள் தோளின் மீது சுமந்த தந்தையும் பாதியில் விட்டு மறைகின்றான் படைத்தவர் ஒருவர் மட்டும் - நம்மை பாவிகளாயினும் அணைக்கின்றார் 2. கட்டிய மனைவியும் காலம் வரும்போது கணவனை பிரிந்தே பறக்கின்றாள் அன்புடன் வாழ்ந்த ஆசை கணவனும் அவனது நேரத்தில் பிரிகின்றான் அவரது வழியில் வாழ்பவர் மட்டும் அவ்வுலகில் அவரோடிருப்பார் 3. ஈட்டிய பொருளும் ஈன்றதம் மக்களும் இறுதி வரை அவை வருவதில்லை பட்டமும் பதவியும் புகழும் பணமும் பட்ட மரமென புரிவதில்லை நித்திய ஜீவனை புவியினில் பெற்றவர் நித்திய ராஜ்யம் சேர்ந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thokaiyaraa Ellaam Maayai Enru Njaani Sonna Vaartthai Anru Oru Pothum Poyyaay Ponathillai Enru Vaazhkkaiyil Enmanathu Kandathae Inru Vaazhkkaiyil Enmanathu Kandathae Inru Aayiram Irunthum Maranatthai Thavirkka Avaniyil Evarukkum Urimaiyillai Andha Maranatthai Enggal Iraivan Pataikkavillai Aathi Manidhanin Paavatthinaal Vandha Akora Maranamithu - Andha 1. Patthu Maadham Sumandha Annaiyum Paasatthin Pillaiyai Marakkinraal Tholin Meethu Sumandha Thanthaiyum Paathiyil Vittu Maraikinraan Pataitthavar Oruvar Mattum - Nammai Paavigalaayinum Anaikkinraar 2. Kattiya Manaiviyum Kaalam Varumpothu Kanavanai Pirinthae Parakkinraal Anpudan Vaazhndha Aasai Kanavanum Avanathu Naeratthil Pirikinraan Avarathu Vazhiyil Vaazhpavar Mattum Avvulakil Avarotiruppaar 3. Eettiya Porulum Eendratham Makkalum Iruthi Varai Avai Varuvathillai Pattamum Pathaviyum Pugazhum Panamum Patta Maramena Purivathillai Nitthiya Jeevanai Puviyinil Pertravar Nitthiya Raajyam Saernthituvaar