பாடல் #35389
பரம ஏழை நாங்கள்
🔤 Parama Aezhai Naanggal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம ஏழை நாங்கள் ஆராதிக்கும்போது பரலோகை விட்டிறங்கி வருகின்ற தேவா உமை போற்ற வார்த்தை போதாது உமை பாட நாவும் போதாது துயர் நீக்கி எமை தேற்றும் தேவா வாழ்க - எம் துதி ஸ்தோத்ர பலி ஏற்கும் ராஜா வாழ்க - ஆஹா ஆராதனை (4) 1. வானாதி வானங்கள் வாழ்கின்ற - எம் ராஜாதி ராஜாவே வாழ்க தேவாதி தேவா உம் நாமம் வாழ்க - எம் கர்த்தாதி கர்த்தா எந்நாளும் வாழ்க - (ஆஹா) 2. பரலோகிலே உமக்கு சிங்காசனம் - எம் பரனே உம் வாசமோ தேவாலயம் தூதர்கள் போற்றிடும் வேந்தே வாழ்க - நல் தூயாதி தூய எம் நாதா வாழ்க - (ஆஹா) 3. எமதாவி ஆத்மாவும் தேகத்தையும் - எம் இதயத்தை ஆளும் உம் பாதங்களில் பலியாக படைக்கின்றோம் பரனே வாழ்க - எமை பரிசுத்தமாய் காக்கம் அரணே வாழ்க - (ஆஹா)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Aezhai Naanggal Aaraathikkumpothu Paralokai Vittirangki Varukindra Thaevaa Umai Portra Vaartthai Pothaathu Umai Paada Naavum Pothaathu Thuyar Neekki Emai Thaerrum Thaevaa Vaazhka - Em Thuthi Sthothra Pali Aerkum Raajaa Vaazhka - Aahaa Aaraadhanai (4) 1. Vaanaathi Vaananggal Vaazhkindra - Em Raajaathi Raajaavae Vaazhka Thaevaathi Thaevaa Um Naamam Vaazhka - Em Kartthaathi Kartthaa Ennaalum Vaazhka - (aahaa) 2. Paralokilae Umakku Singkaasanam - Em Paranae Um Vaasamo Thaevaalayam Thoodharkal Porritum Vaenthae Vaazhka - Nal Thooyaathi Thooya Em Naathaa Vaazhka - (aahaa) 3. Emathaavi Aathmaavum Thaegatthaiyum - Em Idhayatthai Aalum Um Paadhanggalil Paliyaaga Pataikkinrom Paranae Vaazhka - Emai Parisutthamaay Kaakkam Aranae Vaazhka - (aahaa)