பாடல் #35386
பரத்திலிருந்து வந்ததும்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
பரத்திலிருந்து வந்ததும் எனக்காகவோ பரம ஏழைக் கோலமும் எனக்காகவோ என் நெஞ்சம் நீர் அறிவீர் என் வாஞ்சையும் நீர் அறிவீர் என் பாவங்கள் நீக்கிடவே என் சாபங்கள் போக்கிடவே மண்மீதிலே மனுவாய் வந்த இயேசுவே 1. நரகத்தற்குச் செல்லும் வழி நான் தேடிஅலைகையிலே நரன் எனையே புறந்தள்ளியே நானிலம் வெறுக்கையிலே பாவி நான் என்ன செய்வேன் பாரினில் யாரிடம் செல்வேன் நீர் என்னையே மாற்ற வந்தீர் இயேசுவே 2. சத்துருவின் பிடியினின்று நித்தமும் விடுவிக்கவே சத்தியமாய் வழி ஜீவனாய் இத்தரை வந்தவரே எத்தனை நாவிருந்தும் உந்தனை வாழ்த்திப்பாட போதாதையா மாறாத என இயேசுவே