பாடல் #35384
இயேசுன்னா இயேசு
🔤 Yesunnaa Yesu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொகையறா முப்பது முக்கோடி தேவர்களும் உண்டு என்று சொல்றாங்க எண்ணாயிரம் ரிஷிகளும் அஷ்டதிக்கு பாலகர்களும் உண்டு என்று சொல்றாங்க எத்தனை தான் கோடி தெய்வம் இருக்கிறதா சொன்னாலும் மனுஷனையே மீட்பதற்கு மனுஷனாக வந்ததெய்வம் அது எந்த தெய்வம்? அது எந்த தெய்வம்? இயேசுன்னா இயேசு - எங்க இயேசுன்னா இயேசு அவர்தான் உண்மை தெய்வம் என்றே பேசு - அப்படி பேசுவத தடுப்பவன் பிசாசு 1. இயேசு மட்டும் பிறக்கலேனே இரட்சண்யம் இல்ல - அந்த இயேசு பிறந்ததால நமக்கு இனியும் இல்ல தொல்ல வானத்துலேதான் வந்தது பாரு வால் நட்சத்திரம் மெல்ல - அத காணும்போது ஏரோதுக்கு நிம்மதியே இல்ல 2. காபிரியேல் தூதன் வந்து நற்செய்திய சொல்ல - அத கேட்ட மேய்ப்பர் ஏசுவ பாக்க வேகமாக செல்ல மாட்டுத் தொழுவில் பிறந்த அந்த மரியாளின் பிள்ள - அவர் மனுஷனாக வந்தக் காரணம் சாத்தான் வெல்ல 3. ஆதியிலே ஆதாம் ஏவாள் செஞ்ச அந்தப் பாவம் - அதனால் ஆண்டவராம் தேவனுக்கு வந்தது பார்கோபம் கோபம் கொண்ட தேவன் தந்தார் மனுஷனுக்கு சாபம் - அத நீக்க வந்த ராஜவுக்கு இயேசு என்ற நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thokaiyaraa Muppathu Mukkoti Thaevarkalum Untu Enru Solraangga Ennaayiram Rishigalum Ashtathikku Paalakarkalum Untu Enru Solraangga Etthanai Thaan Koti Theyvam Irukkirathaa Sonnaalum Manushanaiyae Meetpatharku Manushanaaga Vandhatheyvam Athu Endha Theyvam? Athu Endha Theyvam? Yesunnaa Yesu - Engga Yesunnaa Yesu Avarthaan Unmai Theyvam Enrae Paesu - Appati Paesuvatha Thatuppavan Pisaasu 1. Yesu Mattum Pirakkalaenae Iratsanyam Illa - Andha Yesu Pirandhathaala Namakku Iniyum Illa Tholla Vaanatthulaethaan Vandhathu Paaru Vaal Natsatthiram Mella - Adha Kaanumpothu Aerothukku Nimmathiyae Illa 2. Kaapiriyael Thoodhan Vanthu Narseythiya Solla - Adha Kaetta Maeyppar Aesuva Paakka Vaegamaaga Sella Maattuth Thozhuvil Pirandha Andha Mariyaalin Pilla - Avar Manushanaaga Vandhak Kaaranam Saatthaan Vella 3. Aathiyilae Aathaam Aevaal Senjja Andhap Paavam - Adhanaal Aandavaraam Devanukku Vandhathu Paarkobam Kobam Konda Devan Thanthaar Manushanukku Saabam - Adha Neekka Vandha Raajavukku Yesu Endra Naamam