பாடல் #35383
வல்லமையின் தேவனின்று
🔤 Vallamaiyin Devaninru
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையின் தேவனின்று விண்ணுலகை விட்டு வந்து மண்ணுலக மைந்தனாக மாறினதே - பூவில் மாசு நீக்கி மாந்தர்களை மாற்றினதே கண்ணின்மணி போல நம்மை கண்ணுறங்கா காத்திடவே கன்னிமரி பாலனாக தோன்றினதே - அது கர்த்தர் ஏசு நாமத்தினால் தோன்றினதே உன்னதத்தில் தேவனுக்கு மகிமை - இந்த பூமி மீது எங்கும் சமாதானம் - எல்லா மனுஷர் மீது பிரியமும் உண்டானதே 1. அதிசயமான தேவன் பாரில் வந்ததால் அகிலத்தின் சாபம் யாவும நீங்க நேர்ந்ததே அவலமும் நீங்கினதே கவலையும் மாறினதே ஆனந்தமாய் எல்லா நெஞ்சும் இன்று மாறினதே 2. தீர்க்கர்கள் உரைத்த வாக்கு நிறைவேறினதே தீமைகள் யாவும் அழிய வழி பிறந்ததே பாவங்கள் நீக்கிடவே தேவக் குமாரனின்று பார்மீது வந்ததினால் பரலோகம் திறந்ததுவே 3. தாவீதின் தேவன் அன்று தாழ்மையாகவே ராஜாதி ராஜன் அன்று ஏழ்மையாகவே தேவாதி தேவனவர் வானாதி வானம் விட்டு தாரணியின் மீது இன்று தயவோடு வந்ததுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyin Devaninru Vinnulakai Vittu Vanthu Mannulaka Maindhanaaga Maarinathae - Poovil Maasu Neekki Maandharkalai Maarrinathae Kanninmani Pola Nammai Kannurangkaa Kaatthidavae Kannimari Paalanaaga Thonrinathae - Athu Kartthar Aesu Naamatthinaal Thonrinathae Unnathatthil Devanukku Makimai - Indha Poomi Meethu Engkum Samaathaanam - Ellaa Manushar Meethu Piriyamum Untaanathae 1. Athisayamaana Devan Paaril Vandhathaal Akilatthin Saabam Yaavuma Neengga Naerndhathae Avalamum Neengkinathae Kavalaiyum Maarinathae Aanandhamaay Ellaa Nenjsum Inru Maarinathae 2. Theerkkarkal Uraittha Vaakku Niraivaerinathae Theemaigal Yaavum Azhiya Vazhi Pirandhathae Paavanggal Neekkidavae Thaevak Kumaaraninru Paarmeethu Vandhathinaal Paralogam Thirandhathuvae 3. Thaaveethin Devan Anru Thaazhmaiyaagavae Raajaathi Raajan Anru Aezhmaiyaagavae Thaevaathi Devanavar Vaanaathi Vaanam Vittu Thaaraniyin Meethu Inru Thayavotu Vandhathuvae