பாடல் #35381
கேளுங்கள் கொடுக்கப்படும்
🔤 Kaelunggal Kotukkappatum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேளுங்கள் கொடுக்கப்படும் - நீங்கள் வாஞ்சையோடு தட்டினால் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் - என்று தேவாதி தேவன் ஏசு வாக்களித்தாரே (2) கொடுங்கள் உடனே கொடுக்கப்படும் - கொடுத்தால் அமுக்கி குலுக்கி சரிந்து மடியில் விழுந்திடச் செய்வார் 1. காயீன் கடமைக்காக காணிக்கை கொடுத்தான் ஆயினும் கர்த்தர் அதை ஏற்கவே இல்லை ஆபேல் காணிக்கையை ஆர்வமாய் அளிக்க வந்தான் ஆண்டவர் அன்புடன் அதை ஏற்றுக் கொண்டாரே 2. ஏழை விதவையவள் தன்னிடமிருந்த இரண்டு காசதனை முழுவதும் அளித்தாள் உள்ளதை எல்லாமே உண்மையாய் அளித்தவளின் உள்ளத்தை அறிந்து அதை ஏற்றுக் கொண்டாரே 3. தேவனின் திருச்சபையாய் மக்கதோனியா மக்களும் தரித்திரத்தில் இருந்த போதிலும் சந்தோஷ மிகுதியுடன் உதார குணத்துடனே தந்ததை தந்தையர் ஏற்றுக் கொண்டாரே 4. கட்டாய மாயுல்ல விசனமாயல்ல கர்த்தருக்காக மனப்பூர்வமுடன் - நாம் உற்சாக மிகுதியுடன் காணிக்கை அளிப்பதினால் உண்மையாய் பிரியம் நம்மேல் வைத்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaelunggal Kotukkappatum - Neenggal Vaanjsaiyotu Thattinaal Thirakkappatum Thaetunggal Kandataiveerkal - Enru Thaevaathi Devan Aesu Vaakkalitthaarae (2) Kotunggal Udanae Kotukkappatum - Kotutthaal Amukki Kulukki Sarinthu Matiyil Vizhunthidach Seyvaar 1. Kaayeen Katamaikkaaga Kaanikkai Kotutthaan Aayinum Kartthar Athai Aerkavae Illai Aapael Kaanikkaiyai Aarvamaay Alikka Vanthaan Aandavar Anpudan Athai Aerruk Kontaarae 2. Aezhai Vidhavaiyaval Thannidamirundha Irantu Kaasathanai Muzhuvathum Alitthaal Ullathai Ellaamae Unmaiyaay Alitthavalin Ullatthai Arinthu Athai Aerruk Kontaarae 3. Devanin Thirucchapaiyaay Makkathoniyaa Makkalum Tharitthiratthil Irundha Pothilum Santhosha Mikuthiyudan Uthaara Kunatthudanae Thandhathai Thanthaiyar Aerruk Kontaarae 4. Kattaaya Maayulla Visanamaayalla Karttharukkaaga Manappoorvamudan - Naam Ursaaga Mikuthiyudan Kaanikkai Alippathinaal Unmaiyaay Piriyam Nammael Vaitthituvaarae