பாடல் #35377
இயேசு இந்த உலகில்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
இயேசு இந்த உலகில் சொன்னதெல்லாம் இனிமை இனிமை இனிமை இயேசு இந்த உலகில் செய்ததெல்லாம் புதுமை புதுமை புதுமை அவர் வாழ்ந்துக் காட்டி சென்ற வாழ்க்கை எளிமை அவர் வாழ்ந்த நாளில் கற்றுத் தந்தார் தாழ்மை 1. பகல் முழுதும் நடந்து சென்று ஊழியத்தை செய்தார் அது அருமை இராமுழுதும் விழித்திருந்து தேவனோடு பேசியதால் தூய்மை - அவர் சத்துருவை ஜெயித்த அநத் திறமை - அது சத்தியத்தின் ஆவி தந்த வல்லமை 2. ஏழையைப் போல் வாழ்ந்ததினால் அறிந்து கொண்டார் ஏழைகளின் நிலைமை பாடுபடும் நமக்கெனவே பரமனிடம் பரிந்துரைத்த கடமை - அவர் ஊழியத்தில் செய்த யாவும் மகிமை - அவை உன்னதத்தில் இருந்து வந்த வல்லமை 3. பாவிகளை மீட்ப தற்காய் எடுத்து வந்த ரூபம் அது அடிமை பாவத்தையே போக்கிடவே சிலுவையிலே அடைந்த துன்பம் கொடுமை - அவர மரிக்குவரை காத்துநின்ற பொறுமை - அவர் மரித்தபின்பு உயிர்த்தெழுந்தார் வல்லமை