பாடல் #35376
இயேசு கிறிஸ்து நேற்றும்
🔤 Yesu Kiristhu Naerrum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் வானம் மாறும் பூமி மாறும் வார்த்தையான இயேசு மாறாதவர் 1. ஆபிரகாமை அழைத்தார் - அவன் சந்ததியை ஆசீர்வதித்தார் வாக்குத் தந்தவர் மாறிடாரே வாழும் நாள்வரை நிறைவேற்றுவார் 2. முட்செடி நடுவினிலிருந்தே - அவர் மோசேயை பேர்சொல்லி அழைத்தார் நாற்பதாண்டு இஸ்ரவேலரை நடத்திச்சென்றிட துணை செய்தாரே 3. ஆடுகள் மேய்த்த ஓர் இளைஞன் - அந்த தாவீதை அபிஷேகம் செய்தார் அரசனாக சிறக்கச் செய்தார் ஆயுள் நாள்வரை ஜெயம் தந்தாரே 4. மனிதர்கள் அன்பு மாறும் மாதேவனின் அன்பு மாறாதே அழைப்பு என்றும் மாறிடாதே அழைத்த இயேசு உண்மை தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Naerrum Inrum Enrenrum Maaraadhavar Vaanam Maarum Poomi Maarum Vaartthaiyaana Yesu Maaraadhavar 1. Aapirakaamai Azhaitthaar - Avan Sandhathiyai Aaseervathitthaar Vaakkuth Thandhavar Maaritaarae Vaazhum Naalvarai Niraivaerruvaar 2. Mutseti Natuvinilirunthae - Avar Mosaeyai Paersolli Azhaitthaar Naarpathaantu Isravaelarai Natatthichsenrida Thunai Seythaarae 3. Aatugal Maeyttha Or Ilainjan - Andha Thaaveethai Apishaegam Seythaar Arasanaaga Sirakkach Seythaar Aayul Naalvarai Jeyam Thanthaarae 4. Manidharkal Anpu Maarum Maadevanin Anpu Maaraathae Azhaippu Enrum Maaritaathae Azhaittha Yesu Unmai Devan