பாடல் #35375
நெஞ்சினில் வேதனை
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
நெஞ்சினில் வேதனை வாட்டிடும் போதெல்லாம் நேசமுடன் என்னை தேற்றும் தெய்வமே நிம்மதி இழந்து தவித்திடும் போதெல்லாம் அமைதியை ஈந்தெனை ஆற்றும் தெய்வமே 1. பழகிய மனிதரும் பழிதனை சுமத்துவார் பாசத்து உறவுகள் தூஷித்து மகிழுவார் நாவினால் புகழுவார் நெஞ்சினில் இகழுவார் நம்பிய நண்பரும் நடுவழி இறக்குவார் எத்தனை இன்னல்கள் மின்னல் போல் தாக்கியும் அத்தனையும் அகற்றி அணைக்கும் தெய்வமே 2. வருத்தங்கள் பாரங்கள் வியாகுலம் சூழ்கையில் உள்ளத்தின் ஆழத்தில் சோர்ந்திடும் நேரத்தில் நெருக்கத்தினின்று நான் விடுதலை வேண்டியே இரக்கத்தின் தேவனை நோக்கிடும் வேளையில் உருக்கமாய் வந்தெனை தழுவி தம் கரத்தினால் அவணைத்தே கண்ணீரை துடைக்கும் தெய்வமே 3. கடும்புயல் வீசிடும் காரிருள் சூழ்ந்திடும் கடலலை மோதிடும் சகலமும் போரிடும் பெருமழை பொழிந்திடும் பேரிடி முழங்கிடும் படகது தவித்திடும் மனமது துடித்திடும் கடல்மேல் நடந்திடும் அவரைக் கண் கண்டிடும் கவலைகள் நீங்கிடும் இன்பம் தங்கிடும்