பாடல் #35374
மலைகள் விலகினாலும்
🔤 Malaigal Vilakinaalum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் - என் கிருபை உனைவிட்டு விலகாது - என் சமாதானத்தின் உடன்படிக்கை - என்றும் உனைவிட்டு நிலைபெயராது என்மேல் மனதுருகும் கர்த்தர் - இன்று எனக்காய் வாக்குகள் தந்தார் 1. வானமும் பூமியும் மாறிடலாம் - அவர் வார்த்தைகள் மாறுவதில்லை உலகமும் ஒருநாள் ஒழிந்திடலாம் - வேத வாக்குகள் ஒழிவதுமில்லை ஆஸ்திகள் யாவுமே அழிந்திடலாம் - அவர் அன்புக்கு அழிவே இல்லை 2. சோர்ந்திடும் போதெல்லாம் வாக்குகளால் - எனை தேற்றிடும் தேவன் ஏசு வீழ்ந்திடும் நேரத்தில் கரம்பிடித்து - எனை தூக்கிடும் தேவனும் ஏசு வாழ்ந்திடும் நாள்வரை உடனிருந்து - எனை வாழ்த்திடும் தேவனும் ஏசு 3. வியாதிகள் தாக்கிடும் நேரத்திலே - வெகு விரைவாய் வந்தெனை காப்பார் வியாகுலம் சூழ்ந்திடும் வேளையிலே - மன வேதனை தீர்த்தெனை சேர்ப்பார் மரணத்தின் இருளினில் நடந்திடினும் - அவர் மனதுருகி எனை மீட்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaigal Vilakinaalum Parvathanggal Nilaipeyarnthaalum - En Kirupai Unaivittu Vilakaathu - En Samaathaanatthin Udanbatikkai - Enrum Unaivittu Nilaipeyaraathu Enmael Manathurukum Kartthar - Inru Enakkaay Vaakkugal Thanthaar 1. Vaanamum Poomiyum Maaridalaam - Avar Vaartthaigal Maaruvathillai Ulakamum Orunaal Ozhinthidalaam - Vaedha Vaakkugal Ozhivathumillai Aasthigal Yaavumae Azhinthidalaam - Avar Anpukku Azhivae Illai 2. Sornthitum Pothellaam Vaakkugalaal - Enai Thaerritum Devan Aesu Veezhnthitum Naeratthil Karampititthu - Enai Thookkitum Devanum Aesu Vaazhnthitum Naalvarai Udanirunthu - Enai Vaazhtthitum Devanum Aesu 3. Viyaathigal Thaakkitum Naeratthilae - Veku Viraivaay Vanthenai Kaappaar Viyaakulam Soozhnthitum Vaelaiyilae - Mana Vaedhanai Theertthenai Saerppaar Maranatthin Irulinil Natanthitinum - Avar Manathuruki Enai Meetpaar