பாடல் #35372
மன்னவரே மனிதருள்
🔤 Mannavarae Manidharul
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னவரே மனிதருள் மாணிக்கமாய் - வந்து மண்ணுலகோரின் பாவங்கள் தீர்த்த கன்மலையே விண்ணவரே அன்பின் பொருள் சொன்னவரே - மரி அன்னையின் மாமகவாகவே உதித்த பொன்மனமே 1. ஏவாளினால் வந்த பாவத்தின் காரிருள் யாவையும் நீக்கிடவே - இந்த பாவ உலகினில் தீப ஒளியினை வீசிட வந்தவரே 2. ஆதி முன்னோர்களின் சாபத்தை நீக்கிட நீதியின் சூரியனாய் - வந்த ஆதரவே எங்கள் மாதயவே - நல்ல ஆறுதலின் வடிவே 3. ஆனந்த தைலத்தினால் எமை நிரப்ப தானிந்த பூமியிலே - வந்த தெள்ளமுதே எங்கள் வான் மழையே - என்றும் தித்திக்கும் தேன் சுவையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannavarae Manidharul Maanikkamaay - Vanthu Mannulakorin Paavanggal Theerttha Kanmalaiyae Vinnavarae Anpin Porul Sonnavarae - Mari Annaiyin Maamakavaagavae Uthittha Ponmanamae 1. Aevaalinaal Vandha Paavatthin Kaarirul Yaavaiyum Neekkidavae - Indha Paava Ulakinil Theeba Oliyinai Veesida Vandhavarae 2. Aathi Munnorkalin Saabatthai Neekkida Neethiyin Sooriyanaay - Vandha Aadharavae Enggal Maadhayavae - Nalla Aarudhalin Vativae 3. Aanandha Thailatthinaal Emai Nirappa Thaanindha Poomiyilae - Vandha Thellamuthae Enggal Vaan Mazhaiyae - Enrum Thitthikkum Thaen Suvaiyae