பாடல் #35371
ஊழியர்கள் சொல்லைக்
🔤 Oozhiyarkal Sollaik
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊழியர்கள் சொல்லைக் கேட்டு விசுவாச பிள்ளைகள் ஒன்றாய் கீழ்ப்படிந்து நடந்ததெல்லாம் அந்தக்காலம் - ஒன்றாய் ஊழியர்கள் சொல் கேளாமல் விசுவாசப் பிள்ளைகளில் சிலர் கண்டபடி நடப்பதெல்லாம் இந்தக்காலம் 1. ஊழியருக்காக தங்கள் கண்களை தந்திடவும் ஊக்கமுடன் முன்வந்தது அந்தக்காலம் - மக்கள் ஊழியரைக் கண்டு கொள்ளாமல் ஸ்தோத்திரம் என்று சொல்லாமல் வந்த வழி போவதெல்லாம் இந்தக்காலம் 2. ஊழியரின் பாதங்களை கழுவி சுத்தம் செய்து அன்பாய் வீட்டிற்குள் ஏற்றுக் கொண்டது அந்தக்காலம் ஊழியரைக் கண்டதும் ஓடி வீட்டிலுள்ள கதவை மூடி வெட்கப்பட செய்வதெல்லாம் இந்தக்காலம் 3. ஊழியர்கள் யாவருமே உத்ரவாதமுள்ள - நல்ல ஆவிக்குரிய தந்தை என்றது அந்தக்காலம் ஊழியர்கள் அத்தனை பேரும் வேலை வெட்டி இல்லாதவர்கள் துடைத்து போடும் கந்தை என்பது இந்தக்காலம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oozhiyarkal Sollaik Kaettu Visuvaasa Pillaigal Onraay Keezhppatinthu Natandhathellaam Andhakkaalam - Onraay Oozhiyarkal Sol Kaelaamal Visuvaasap Pillaigalil Silar Kandapati Natappathellaam Indhakkaalam 1. Oozhiyarukkaaga Thanggal Kankalai Thanthidavum Ookkamudan Munvandhathu Andhakkaalam - Makkal Oozhiyaraik Kantu Kollaamal Sthotthiram Enru Sollaamal Vandha Vazhi Povathellaam Indhakkaalam 2. Oozhiyarin Paadhanggalai Kazhuvi Suttham Seythu Anpaay Veettirkul Aerruk Kondathu Andhakkaalam Oozhiyaraik Kandathum Oti Veettilulla Kathavai Mooti Vetkappata Seyvathellaam Indhakkaalam 3. Oozhiyarkal Yaavarumae Uthravaadhamulla - Nalla Aavikkuriya Thanthai Endrathu Andhakkaalam Oozhiyarkal Atthanai Paerum Vaelai Vetti Illaadhavarkal Thutaitthu Potum Kanthai Enbathu Indhakkaalam