பாடல் #35364
தாயிடத்தில் காணாத
🔤 Thaayidatthil Kaanaadha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயிடத்தில் காணாத பாசத்தையெல்லாம் - என் தேவனிடம் கண்டேன் அதை எப்படி சொல்வேன் தந்தையிடம் காணாத நேசத்தையெல்லாம் - என் இயேசுவிடம் கண்டேன் அதை எவ்விதம் சொல்வேன் 1. உன்னைத் தெடுவோன் என் கண்ணின் மணியை - என்றும் தொடுவதுபோல் என்று தேவன் உரைத்தார் வானம், பூமி யாவுமே மாறிவிடலாம் - தேவ வார்த்தை என்றும் பாரினில் மாறுவதில்லை 2. உனக்கெதிராக எழும்புகின்ற - எந்த ஆயுதமும் என்றும் வாய்ப்பதில்லையே அன்புநிறை வாக்கு மாறுவதில்லை - அவர் அன்பதனை சொல்லி தீருவதில்லை 3. சொந்தங்களும் பாரில் நிந்தித்திடலாம் - சில நண்பர்களும் நாளும் வஞ்சித்திடலாம் நேற்றும் இன்றும் என்றும் பாசமுடன் காத்து தேற்றுகின்ற தேவன் மாறுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayidatthil Kaanaadha Paasatthaiyellaam - En Devanidam Kantaen Athai Eppati Solvaen Thanthaiyidam Kaanaadha Naesatthaiyellaam - En Yesuvidam Kantaen Athai Evvidham Solvaen 1. Unnaith Thetuvon En Kannin Maniyai - Enrum Thotuvathupol Enru Devan Uraitthaar Vaanam, Poomi Yaavumae Maarividalaam - Thaeva Vaartthai Enrum Paarinil Maaruvathillai 2. Unakkethiraaga Ezhumpukindra - Endha Aayudhamum Enrum Vaayppathillaiyae Anpunirai Vaakku Maaruvathillai - Avar Anbathanai Solli Theeruvathillai 3. Sondhanggalum Paaril Ninthitthidalaam - Sila Nanparkalum Naalum Vanjsitthidalaam Naerrum Inrum Enrum Paasamudan Kaatthu Thaerrukindra Devan Maaruvathillai