பாடல் #3536
மங்களானந்தம் மகத்வானந்தம்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. மங்களானந்தம்! மகத்வானந்தம்! மணர்க்கானந்தம்! தமர்க்கானந்தம்! வாழ்வுக் காதாரமான ஆனந்தம்! மன்னுக! சுபானந்தம்! சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா! சுருதி ஆரணா! சுகுணா! சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா! சோபன ஆசி தா! ஆசி தா! ! 2. கானாவூரில் தானாய்க் கல்யாணம் கண்டாசி தந்தாய் கனமாய் முனம் கருணைவாரி! வந்தே இம்மணம் கடைக்கண் பார் இத்தினம். 3. அன்னியோன்னியம் என்னும் நல் ஐக்யம் ஆன இவ்வாழ்க்கைக்கே அகத்தியம் அவ்வித சீரில் ஜீவிக்க! நித்யம் அறிவோம் வேத வாக்யம். 4. மகா முக்யமாம் மாண்புறு யோக்யம் மக்கள் சந்தான செல்வமாம் பாக்யம் மணர்க்கும் அருள்! ஆயுள் ஆரோக்யம் மகிழ்கொள் மற்றும் சிலாக்கியம். 5. பகரும் உயர் மெய்த் தேவ பக்தி பாங்குயர் ஆன்றோர் பலத்த புத்தி பண்பாய் இவர்க்குள் இதய சுத்தி பதத்து வை! இருத்தி. 6. தம்பதி இவர் சந்ததம் வாழ்க! தமர் சுற்றத்தார் சாலவே வாழ்க! தரணியில் மெய் மணம் நேர் வாழ்க! தம்பிரான் யேசு வாழ்க!