பாடல் #35359
எலியா ஜெபிக்கையில்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
எலியா ஜெபிக்கையில் இறங்கி வந்த அக்கினி எங்கள் நடுவில் இன்று இறங்கவேண்டுமே எலியாவின் தேவன் எங்கள் தேவன், அந்த கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் என்று போற்றிப் பாடுவோம் 1. அக்கினியால் உத்தரவை அருளிடும் தெய்வம் நீரல்லவோ ஜெபம் கேட்டு ஜெகத்தினிலே ஜெயம் தரும் தேவன் நீரல்லவோ 2. அக்கினியை பூமியின்மேல் அளித்திட வந்தவர் நீரல்லவோ அக்கினியும் பற்றிடவே அற்புதம் செய்பவர் நீரல்லவோ 3. எமைபலியாய் ஒப்புவித்தோம் ஏற்றுக் கொள்வீரே எம் தெய்வமே பலியதனை பட்சித்திட புவியினில் அக்கினி வரவேண்டுமே