பாடல் #35354
வாரந்தோறும் தவறாம
🔤 Vaaranthorum Thavaraama
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரந்தோறும் தவறாம வேலையெல்லாம் பாராம கோயிலுக்கு போறீங்களே எதுக்கு? காலந்தோறும் பட்டகஷ்டம் நீங்கிவிட்ட கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமய்யா அதுக்கு 1. எத்தனையோ கோடி தெய்வம் இருக்கையிலே ஏசுவையே தெய்வமென வணங்குவது எதுக்கு? இத்தரையில் மனிதருக்காய் ஜீவனையே தந்ததெய்வம் சத்தியமா ஏசுதாங்க அதுக்கு 2. வெக்கம் சிக்கம் இல்லாம வாய்கிழிய சத்தம்போட்டு அல்லேலூயா சொல்வதெல்லாம் எதுக்கு? துக்கம் துயரம் நீக்கி எங்க உள்ளத்தில சந்தோஷத்த ஆண்டவராம் ஏசுதந்தார் அதுக்கு 3. வாலிபத்தில் ஜாலியாக இருப்பதையே விட்டுவிட்டு உலக இன்பம் வெறுக்கறீங்க எதுக்கு? ஜாலியான போலிவாழ்க்கை காலியாகிப் போகும் என்று அழியாத மோட்சம் போதும் அதுக்கு 4. வெள்ளை ஆடை போட்டுகிட்டு பொன்னகையை கழட்டிபுட்டு வேதத்தையே சுமக்குறீங்க எதுக்கு? பொன்னகையும் ஆடம்பரம் அழிந்துபோகும் - அழியாத புன்னகையே போதுமய்யா அதுக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaranthorum Thavaraama Vaelaiyellaam Paaraama Koyilukku Poreenggalae Ethukku? Kaalanthorum Pattakashtam Neengkivitta Katavulukku Nanri Solla Vaentumayyaa Athukku 1. Etthanaiyo Koti Theyvam Irukkaiyilae Aesuvaiyae Theyvamena Vanangkuvathu Ethukku? Ittharaiyil Manidharukkaay Jeevanaiyae Thandhatheyvam Satthiyamaa Aesuthaangga Athukku 2. Vekkam Sikkam Illaama Vaaykizhiya Satthampottu Allaelooyaa Solvathellaam Ethukku? Thukkam Thuyaram Neekki Engga Ullatthila Santhoshattha Aandavaraam Aesudhanthaar Athukku 3. Vaalibatthil Jaaliyaaga Iruppathaiyae Vittuvittu Ulaka Inbam Verukkareengga Ethukku? Jaaliyaana Polivaazhkkai Kaaliyaakip Pokum Enru Azhiyaadha Motsam Pothum Athukku 4. Vellai Aatai Pottukittu Ponnakaiyai Kazhattiputtu Vaedhatthaiyae Sumakkureengga Ethukku? Ponnakaiyum Aadambaram Azhinthupokum - Azhiyaadha Punnakaiyae Pothumayyaa Athukku