பாடல் #35349
மனதில் இருள் நீங்கிட
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
மனதில் இருள் நீங்கிட மகிமை ஒளி வீசிட மாதேவன் பாரின் மீது மாந்தராய் வந்தார் 1. பலகோடி மாந்தரின் தடுமாறும் வாழ்க்கையின் நிலைகண்ட வேந்தரே மனுவாய் வந்தார் நிலையான வாழ்வினை விலையின்றி ஈந்திட இருளான பூவினில் சுடராய் வந்தார் 2. உலகை உண்டாக்கிய சிருஷ்டிகரானவர் உலகோரை மீட்டிட உதித்தாரன்று அன்பான தேவனே அவணியின் மீதினில் அனைவர்க்கும் மீட்பையே ஈந்தாரின்று 3. பாவத்தின் சோதனை சாபத்தின் வேதனை லோகத்தில் மாற்றிட சுதனாய்வந்தார் சோகத்தின் வாழ்வினில் மூழ்காமல் காக்கவே தியாகத்தின் ரூபமாய் தேவன் வந்தார் 4. அலைமோதும் பாரங்கள் சூழ்ந்திடும் நேரங்கள் அமைதியை நாடிடும் நமக்காகவே ஆனந்த தைலத்தின் அபிஷேகம் நல்கிட ஆதரை மீதினில் அன்பாய் வந்தார்