பாடல் #35348
இன்று முதல் உங்களை
🔤 Inru Mudhal Unggalai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று முதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன தேவனையே என்றும் துதிப்பேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (2) கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் 1. நேற்றுவரை பூமியிலே நானடைந்த பாடுகளை மாற்றியநல் தேவனையே போற்றி என்றும் பாடிடுவேன் தேற்றுகின்ற வாக்குகளை அளித்தெந்தன் நெஞ்சத்தையே ஆற்றுகின்ற அன்பரவர் திருப்பாதம் நாடிடுவேன் 2. ஆவியின்நல் வரங்களை பாவியெனக் கீந்தவரை ஆவியோடும் கருத்தோடும் அகமகிழ்ந்து பாடிடுவேன் ஆவலுடன் என்னையுமே அவர் மீட்டுக் கொண்டதினால் ஜீவனுள்ள நாள்வரையில் அவர் நாமம் போற்றிடுவேன் 3. உம் வருகை நாள் வரையில் உம்மோடு வாழ்ந்திடவே தம்மருளை நாடுகிறேன் தயவோடு ஈந்திடுவீர் இம்மையிலும் மறுமையிலும் உமதாசீர்வாதத்துடன் இன்னலின்றி மகிழ்வோடு இளைப்பாற செய்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Mudhal Unggalai Naan Aaseervathippaen Enru Sonna Devanaiyae Enrum Thuthippaen Karttharukku Sthotthiram (2) Kartthaathi Karttharukku Sthotthiram, Sthotthiram 1. Naerruvarai Poomiyilae Naanataindha Paatugalai Maarriyanal Devanaiyae Porri Enrum Paatituvaen Thaerrukindra Vaakkugalai Alitthendhan Nenjjatthaiyae Aarrukindra Anbaravar Thiruppaadham Naatituvaen 2. Aaviyinnal Varanggalai Paaviyenak Keendhavarai Aaviyotum Karutthotum Agamakizhnthu Paatituvaen Aavaludan Ennaiyumae Avar Meettuk Kondathinaal Jeevanulla Naalvaraiyil Avar Naamam Porrituvaen 3. Um Varukai Naal Varaiyil Ummotu Vaazhnthidavae Thammarulai Naatukiraen Thayavotu Eenthituveer Immaiyilum Marumaiyilum Umathaaseervaadhatthudan Innalinri Makizhvotu Ilaippaara Seythituveer