பாடல் #35343
எழும்பி பிரகாசி
🔤 Ezhumpi Pirakaasi
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது இருளானது பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடுமே ஆனாலும் கர்த்தர் உன்மேல் உதிப்பார் அவர் மகிமை உன்மேல் காணப்படும் 1. கடற்கரை திரளானக் கூட்டம் உன்வசமாக திரும்பிடும் நேரம் ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடமாகவே வந்து சேரும் சுற்றிலும் உன் கண்ணை ஏறெடுத்துப்பார் சோராமல் எழும்பி பிரகாசிப்பாய் 2. இனி உந்தன் தேசத்தில் கொடுமை - அது இல்லாமல் போவதைக் காண்பாய் இனி உந்தன் எல்லையில் அழிவும் ஒரு நாசமும் இல்லாமல் போகும் உன் மதில்கள் இரட்சிப்பாய் மாறிடுமே உன் வாசல் துதியாக மாறிடுமே 3. இனி உந்தன் சூரியன் என்றும் - அது அஸ்த மன மாவதில்லை இனி உந்தன் சந்திரன் என்றும் - அது மறைந்திங்கு போவதுமில்லை கர்த்தர் உன் நித்திய வெளிச்சமானார் உன் துக்க நாட்கள் முடிந்ததின்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpi Pirakaasi Un Oli Vandhathu Karttharin Makimai Unmael Uthitthathu Irulaanathu Poomiyaiyum Kaarirul Jananggalaiyum Mootumae Aanaalum Kartthar Unmael Uthippaar Avar Makimai Unmael Kaanappatum 1. Katarkarai Thiralaanak Koottam Unvasamaaga Thirumpitum Naeram Jaathigalin Palattha Saenai Unnidamaagavae Vanthu Saerum Surrilum Un Kannai Aeretutthuppaar Soraamal Ezhumpi Pirakaasippaay 2. Ini Undhan Thaesatthil Kotumai - Athu Illaamal Povathaik Kaanpaay Ini Undhan Ellaiyil Azhivum Oru Naasamum Illaamal Pokum Un Mathilkal Iratsippaay Maaritumae Un Vaasal Thuthiyaaga Maaritumae 3. Ini Undhan Sooriyan Enrum - Athu Astha Mana Maavathillai Ini Undhan Santhiran Enrum - Athu Marainthingku Povathumillai Kartthar Un Nitthiya Velicchamaanaar Un Thukka Naatkal Mutindhathinru