பாடல் #35327
கனிமண் நான்தான்
🔤 Kaniman Naanthaan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொகையறா படைத்தீரே படைப்பெல்லாம் மனுவிற்காக - அந்த மனுவை படைத்தீர் உம்மை என்றும் வணங்க மண்ணான நானுமை மறந்தென்றும் வாழாமல் எந்நாளும் உமைநினைந்து வாழ்ந்திடவே அருள்தாரும் கனிமண் நான்தான் தேவா - பரம குயவனும் நீர்தான் இறைவா உம் சித்தம் போல் எனை வனைந்திட வேண்டும் உம் வழி நானும் நடந்திட வேண்டும் 1. நானல்ல நீர்தான் எனை - இந்த நானிலத்தில் தெரிந்து கொண்டீர் கருவாக உருவாகுமுன் - என்னை பேர் சொல்லியே அழைத்தவர் நீர் கனமான உந்தன் ஊழிய் செய்ய எனக்கருள் ஈந்திடுவீர் - ஐயா 2. அன்பே உம் சிலுவையின்றி - இந்த அவனியிலே மேன்மை உண்டோ என்மேன்மை யாவுமின்று - உம் முன்பாகவே குப்பையன்றோ பெயர் புகழ் எல்லாம் உம்பாதம் சேரும் மாறாத கிருபை போதும் என்றும் 3. காணாத ஆட்டினைப் போல் - வழி தவறியே நான் செல்கையிலே மாறாத அன்புடனே - எனை தேடிவந்த நல்மேய்ப்பரே எனக்காக உந்தன் ஜீவனைத் தந்தீர் உமக்காக நான் வாழுவேன் - என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thokaiyaraa Pataittheerae Pataippellaam Manuvirkaaga - Andha Manuvai Pataittheer Ummai Enrum Vanangga Mannaana Naanumai Maranthenrum Vaazhaamal Ennaalum Umaininainthu Vaazhnthidavae Arulthaarum Kaniman Naanthaan Thaevaa - Parama Kuyavanum Neerthaan Iraivaa Um Sittham Pol Enai Vanainthida Vaentum Um Vazhi Naanum Natanthida Vaentum 1. Naanalla Neerthaan Enai - Indha Naanilatthil Therinthu Konteer Karuvaaga Uruvaakumun - Ennai Paer Solliyae Azhaitthavar Neer Kanamaana Undhan Oozhiy Seyya Enakkarul Eenthituveer - Aiyaa 2. Anpae Um Siluvaiyinri - Indha Avaniyilae Maenmai Unto Enmaenmai Yaavuminru - Um Munpaagavae Kuppaiyanro Peyar Pugazh Ellaam Umpaadham Saerum Maaraadha Kirupai Pothum Enrum 3. Kaanaadha Aattinaip Pol - Vazhi Thavariyae Naan Selkaiyilae Maaraadha Anpudanae - Enai Thaetivandha Nalmaeypparae Enakkaaga Undhan Jeevanaith Thantheer Umakkaaga Naan Vaazhuvaen - Enrum