பாடல் #35326
கலப்பையின் மேல்
🔤 Kalappaiyin Mael
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலப்பையின் மேல் கைகளை - நாம் வைத்து விட்டோம் கலங்கி இனி பின் திரும்பி பார்க்க மாட்டோம் உலகம் இனிவேண்டாம் - நம் ஏசு போதும் (2) 1. வல்லவரை அறிந்துகொண்டோம் நல்ல பங்கை தெரிந்து கொண்டோம் உள்ளமதில் நிறைவாய் - அவரை ஏற்றுக் கொண்டோம் இன்னல்களை அவர்மேல் வைத்தோம் தொல்லைகளை தொலைத்தே விட்டோம் வள்ளலவர் பிள்ளையாக - மாறிவிட்டோம் உலகத்தில் உண்மை இல்லை அதிலெமக்கு பங்கும் இல்லை ஏசுவைப்போல் நேசரில்லை - அவர்போதுமே அல்லேலூயா அல்லேலூயா (2) 2. பரிசுத்த தெய்வம் அவரே பரலோக ராஜன் அவரே துன்பஙக்ள் தீர்க்கும் - நல்ல துணையாளரே அணையாத தீபம் அவரே ஆதரையில் ஒளியும் நீரே நீதியின் சூரியன் அவரே - நிலையானவர் இருளான பாவம் வேண்டாம் அழிகின்ற லோகம் வேண்டாம் அழியாத தேவன் ஏசு - அவர் போதுமே (அல்லேலூயா ) 3. அழகுநிறை தேவன் அவரே அன்பு மணவாளனவரே பதினாயிரம் பேரில் - சிறந்தவரே உண்மையின் ரூபம் அவரே வெண்மை சிவப்பானவரே நன்மைகளின் தேவன் அவரே - விண்நாயகன் அவர்தானே ஜீவன் என்போம் அவரை விட்டு எங்கு செல்வோம் அவர்நாமம் எங்கும் சொல்வோம் - அவர் போதும் (அல்லேலூயா )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalappaiyin Mael Kaigalai - Naam Vaitthu Vittom Kalangki Ini Pin Thirumpi Paarkka Maattom Ulakam Inivaentaam - Nam Aesu Pothum (2) 1. Vallavarai Arinthukontom Nalla Pangkai Therinthu Kontom Ullamathil Niraivaay - Avarai Aerruk Kontom Innalkalai Avarmael Vaitthom Thollaigalai Tholaitthae Vittom Vallalavar Pillaiyaaga - Maarivittom Ulakatthil Unmai Illai Athilemakku Pangkum Illai Aesuvaippol Naesarillai - Avarpothumae Allaelooyaa Allaelooyaa (2) 2. Parisuttha Theyvam Avarae Paraloga Raajan Avarae Thunbangakl Theerkkum - Nalla Thunaiyaalarae Anaiyaadha Theebam Avarae Aadharaiyil Oliyum Neerae Neethiyin Sooriyan Avarae - Nilaiyaanavar Irulaana Paavam Vaentaam Azhikindra Logam Vaentaam Azhiyaadha Devan Aesu - Avar Pothumae (allaelooyaa ) 3. Azhakunirai Devan Avarae Anpu Manavaalanavarae Pathinaayiram Paeril - Sirandhavarae Unmaiyin Roobam Avarae Venmai Sivappaanavarae Nanmaigalin Devan Avarae - Vinnaayakan Avarthaanae Jeevan Enpom Avarai Vittu Engku Selvom Avarnaamam Engkum Solvom - Avar Pothum (allaelooyaa )