பாடல் #35325
வான்மீதிலே வாழ்ந்தவர் பாலனாய்
🔤 Vaanmeethilae Vaazhndhavar Paalanaay
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வான்மீதிலே வாழ்ந்தவர் பாலனாய் பார்மீதிலே பிறந்தார் பாடுவோம் அலேலூயா (4) 1. பாவங்கள் போக்கவும் சாபங்கள் நீக்கவும் பார்மீதிலே மனுவாய் வந்தார் பாரங்கள் தீர்க்கவும் சோகங்கள் மாற்றவும் பரனேசுவே புவியில் வந்தார் 2. சத்திய வழியினில் நித்தமும் வாழவே சமாதானத்தின் பிரபு பிறந்தார் உத்தம மார்க்கத்தின் உண்மையாய் வாழவே உன்னதரே உலகில் வந்தார் 3. இத்தரை மீதினில் ஆதரவளித்திட ஆதவனாய் அவர் உதித்தார் அக்கிரமம் நீக்கிட அக்கரை சேர்த்திட அன்பானவர் அவதரித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanmeethilae Vaazhndhavar Paalanaay Paarmeethilae Piranthaar Paatuvom Alaelooyaa (4) 1. Paavanggal Pokkavum Saabanggal Neekkavum Paarmeethilae Manuvaay Vanthaar Paaranggal Theerkkavum Soganggal Maartravum Paranaesuvae Puviyil Vanthaar 2. Satthiya Vazhiyinil Nitthamum Vaazhavae Samaathaanatthin Pirapu Piranthaar Utthama Maarkkatthin Unmaiyaay Vaazhavae Unnatharae Ulakil Vanthaar 3. Ittharai Meethinil Aadharavalitthida Aadhavanaay Avar Uthitthaar Akkiramam Neekkida Akkarai Saertthida Anpaanavar Avatharitthaar