பாடல் #35324
அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்
🔤 Athisayanggalaik Kaanappannuvaen
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் - உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் பாவ எகிப்திலிருந்து உன்னை மீட்ட அந்த நாட்களில் - நடந்ததுபோல் அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் - இது அன்பின் தேவன் வாக்குத்தத்தமே 1. அக்ரமத்தை பொறுத்துக் கொண்டு மீறுதல்கள் மன்னிக்கின்ற தேவரீர்க்கு ஒப்பான தேவன் யாருண்டு? கிருபை செய்ய சித்தங்கொண்டு கோபம் எம்மேல் வைத்திடாத தேவரீர்க்கு ஒப்பான தேவன் யாருண்டு? 2. திகைத்துக் கலங்கி வாழ்ந்த நாளில் திரும்ப எம்மேல் இரக்கம் காட்டி நெருங்கி வந்த உம்மைப்போல் தேவன் யாருண்டு? சகல எங்கள் பாவங்களை சமுத்திரத்தின் ஆழம் போட்டு அகலச் செய்த உம்மைப்போல தேவன் யாருண்டு?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayanggalaik Kaanappannuvaen - Unnai Athisayanggalaik Kaanappannuvaen Paava Ekipthilirunthu Unnai Meetta Andha Naatkalil - Natandhathupol Athisayanggalaik Kaanappannuvaen - Ithu Anpin Devan Vaakkutthatthamae 1. Akramatthai Porutthuk Kontu Meerudhalkal Mannikkindra Thaevareerkku Oppaana Devan Yaaruntu? Kirupai Seyya Sitthangkontu Kobam Emmael Vaitthitaadha Thaevareerkku Oppaana Devan Yaaruntu? 2. Thikaitthuk Kalangki Vaazhndha Naalil Thirumba Emmael Irakkam Kaatti Nerungki Vandha Ummaippol Devan Yaaruntu? Sakala Enggal Paavanggalai Samutthiratthin Aazham Pottu Agalach Seytha Ummaippola Devan Yaaruntu?