பாடல் #35323
ஆயிரம் வருஷம் ராஜாதி ராஜனாய்
🔤 Aayiram Varusham Raajaathi Raajanaay
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் வருஷம் ராஜாதி ராஜனாய் தூயவர் இயேசு அரசாளுவார் அவருடன் நாமும் ஆள்கின்ற நாளும் அதிவிரைவாய் நெருங்குதே - உள்ளத்தில் ஆனந்தமே பொங்குதே - ஆ... ஆ... ஆ... ஆ... ஆலலூயா (4) 1. கள்ள தீர்க்கதரிசி - அவனுடன் பொல்லாங்கன் அந்தி கிறிஸ்து அக்கினி கந்தகம் எரிகின்ற கடலில் அடியோடு தள்ளப்பட்டதால் அக்ரமங்கள் நடப்பதில்லை - எவரும் அநியாயம் செய்வதில்லை 2. வலுசர்ப மானவனும் - சாத்தான் பாதாளம் தள்ளப்படுவான் ஆயிரம் வருஷம் சங்கிலியாலே விலங்கிட்டு கட்டப்பட்டதால் யுத்தங்களும் வருவதில்லை - எவரும் பட்டயங்கள் எடுப்பதில்லை 3. சந்திரனின் வெளிச்சமன்று - சூரியன் போல்மாறும் காலமதுவே சூரியன் வெளிச்சம் ஏழு மடங்காய் பிரகாசம் அடைந்திடுமே முட்செடிகள் முளைப்பதில்லை - அன்று தேவதாறு குறைவதில்லை 4. ஆட்டு குட்டி யுடனே - ஓநாய் அந்நாளில் தங்கி தரிக்கும் புலியுடன் வெள்ளாட்டு குட்டியும் படுக்கும் பசுவோடு கரடி மேயும் சிங்கமுடன் கன்றும் காளையும் - அன்று பங்கமின்றி கூடி வாழுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Varusham Raajaathi Raajanaay Thooyavar Yesu Arasaaluvaar Avarudan Naamum Aalkindra Naalum Athiviraivaay Nerungkuthae - Ullatthil Aanandhamae Pongkuthae - Aa... Aa... Aa... Aa... Aalalooyaa (4) 1. Kalla Theerkkatharisi - Avanudan Pollaanggan Anthi Kiristhu Akkini Kandhakam Erikindra Katalil Atiyotu Thallappattathaal Akramanggal Natappathillai - Evarum Aniyaayam Seyvathillai 2. Valusarpa Maanavanum - Saatthaan Paathaalam Thallappatuvaan Aayiram Varusham Sangkiliyaalae Vilangkittu Kattappattathaal Yutthanggalum Varuvathillai - Evarum Pattayanggal Etuppathillai 3. Santhiranin Velicchamanru - Sooriyan Polmaarum Kaalamathuvae Sooriyan Veliccham Aezhu Matangkaay Pirakaasam Atainthitumae Mutsetigal Mulaippathillai - Anru Thaevathaaru Kuraivathillai 4. Aattu Kutti Yudanae - Onaay Annaalil Thangki Tharikkum Puliyudan Vellaattu Kuttiyum Patukkum Pasuvotu Karati Maeyum Singgamudan Kanrum Kaalaiyum - Anru Panggaminri Kooti Vaazhumae