பாடல் #35316
மகிமையின் ராஜா நீரே
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
மகிமையின் ராஜா நீரே மனமகிழ்வோடு உம்மைப் பாடுவேன் எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் என்றுமென்றும் எந்தன் பெலன் நீரே ஆலேலூயா ஆலேலூயா ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆலேலூயா 1. மாறிடும் லோகினில் என்னை மீட்டிட மாறிடா அன்புடன் வந்ததெய்வமே உம்மை என்றுமே போற்றிபாடுவேன் உந்தன் அன்பை பாடி பாடி உள்ளம் மகிழுவேன் 2. எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீரே ஏசுவே உமக்கு நான் என்ன செய்குவேன் சுகத்தை தந்தீரே பெலத்தை தந்தீரே ஜீவன் தந்து வாழவைத்த உம்மைப் பாடுவேன் 3. அன்னையை போலென்னை ஆற்றி தேற்றீனீர் தந்தையை போலென்னை தூக்கி சுமந்தீரே அன்பு தெய்வமே ஆத்ம நேசரே ஆவியோடும், கருத்துடன் உம்மைப் பாடுவேன் 4. என்று நீர் வருவீரோ என்று ஏங்கிடும் ஏழையை என்றும் நீர் மறப்பதில்லையே கர்த்தராகிய இயேசு ராஜனே சீக்ரமாய் வந்தென்னை சேர்த்துக் கொள்ளுமே