பாடல் #35315
பேர் சொல்லி என்னை
🔤 Paer Solli Ennai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேர் சொல்லி என்னை அழைத்தவர் நீரே பாரினில் உமையன்றி யாரிடம் செல்வேன் சோதனை நேரம் வேதனை நேரம் 1. தாயுன்னை மறந்தாலும் - என்றும் நானுன்னை மறவேன் என்றீர் தள்ளாடி நடக்கின்ற என்னை தயவோடு தாங்கிடுவீர் 2. உனைவிட்டு விலகுவதில்லை உனை என்றும் கைவிடுவதில்லை என்றுரைத்த எந்தன் தேவா இன்றென்னை கண்பாருமே 3. உபத்திரவம் பெருகிடும் நேரம் சகித்திட பெலன் தாருமே உலகத்தை ஜெயித்த என் தேவா உம் தாசன் எனை பாருமே 4. என் வாழ்வின் படகென்று மூழ்கும் என்கிற நிலை பாரய்யா கடல்காற்றை அதட்டிய தேவா அடியேனை நினைப்பீரய்யா 5. உம் வல்ல வாக்குகள் யாவும் ஒரு நாளும் பொய்யாகுமோ அவையாவும் என் வாழ்வில் இன்று நிறைவேற அருள் தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paer Solli Ennai Azhaitthavar Neerae Paarinil Umaiyanri Yaaridam Selvaen Sodhanai Naeram Vaedhanai Naeram 1. Thaayunnai Maranthaalum - Enrum Naanunnai Maravaen Enreer Thallaati Natakkindra Ennai Thayavotu Thaangkituveer 2. Unaivittu Vilakuvathillai Unai Enrum Kaivituvathillai Enruraittha Endhan Thaevaa Inrennai Kanpaarumae 3. Ubatthiravam Perukitum Naeram Sakitthida Pelan Thaarumae Ulakatthai Jeyittha En Thaevaa Um Thaasan Enai Paarumae 4. En Vaazhvin Patakenru Moozhkum Enkira Nilai Paarayyaa Katalkaarrai Adhattiya Thaevaa Atiyaenai Ninaippeerayyaa 5. Um Valla Vaakkugal Yaavum Oru Naalum Poyyaakumo Avaiyaavum En Vaazhvil Inru Niraivaera Arul Thaarumae