பாடல் #35312
நடுவானில் நம்மை சேர்க்க
🔤 Natuvaanil Nammai Saerkka
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நடுவானில் நம்மை சேர்க்க வருவாரே அன்பின் தேவன் மருரூப மாகி நாமும் அவரோடு பறந்து செல்வோம் அந்த நாள் சீக்கிரம் வந்ததால் ஸ்தோத்திரம் 1. தேவ எக்காளம் முழங்கிடும் நாள் தீவிரமாக நெருங்கிடுதே பாவத்தின் சாயல் களைவோம் பரிசுத்த சாயல் அடைவோம் 2. கர்த்தருக்குள் மரித்தவர்கள் களிப்புடன் அன்று எழுந்திடுவார் இத்தரை மீது வாழ்கின்ற பக்தர்களும் பறந்திடுவோம் 3. இரகசியமான வருகையிதே அகத்தினில் வாஞ்சை பெருகிடுதே ஜெகத்தினை படைத்தவரை முகமுகமாய் காண்போம் 4. மாம்சத்தின் சிந்தை மரணமாகும் ஆவியின் சிந்தை ஜீவனாகும் அழிகின்ற வாழ்வை வெறுப்போம் அன்பருடன் வாழ பறப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natuvaanil Nammai Saerkka Varuvaarae Anpin Devan Marurooba Maaki Naamum Avarotu Paranthu Selvom Andha Naal Seekkiram Vandhathaal Sthotthiram 1. Thaeva Ekkaalam Muzhangkitum Naal Theeviramaaga Nerungkituthae Paavatthin Saayal Kalaivom Parisuttha Saayal Ataivom 2. Karttharukkul Maritthavarkal Kalippudan Anru Ezhunthituvaar Ittharai Meethu Vaazhkindra Paktharkalum Paranthituvom 3. Irakasiyamaana Varukaiyithae Agatthinil Vaanjsai Perukituthae Jegatthinai Pataitthavarai Mugamugamaay Kaanpom 4. Maamsatthin Sinthai Maranamaakum Aaviyin Sinthai Jeevanaakum Azhikindra Vaazhvai Veruppom Anbarudan Vaazha Parappom