பாடல் #35305
இரகசிய வருகையில்
🔤 Irakasiya Varukaiyil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரகசிய வருகையில் மறுரூபமாகி அவருடன் பறந்திடுவேன் அதிசய தேவனின் அழகிய சாயலாய் அவரைப்போல் மாறிடுவேன் ஆ... ஆ... ஆ... அல்லேலூயா (4) 1. பிரதான தூதனின் சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் இறங்கியவர் வந்திடும் நாள் நெருங்கிட தூய்மையாவோம் - நாமும் 2. மரித்தவர்கள் உயிருடனெழுந்து மகிபனுடன் வரும் நாள் மணவாளனை எதிர்கொண்டு போய் மறுரூபமாகிடுவோம் - நாமும் 3. திருடனைப் போல் அவர் வருகின்றதால் தீவிரம் விழித்திருப்போம் தினம் ஜெபித்து வேதத்தையும் தியானித்து ஆயத்தமாவோம் - நாமும் 4. மேகத்தில் நாம் அவருடன் பறந்து மத்தியவானத்திலே மகிமையின் ராஜன் ஏசுவுடன் மகிழ்வுடன் இருந்திடுவோம் - நாமும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakasiya Varukaiyil Maruroobamaaki Avarudan Paranthituvaen Athisaya Devanin Azhakiya Saayalaay Avaraippol Maarituvaen Aa... Aa... Aa... Allaelooyaa (4) 1. Pirathaana Thoodhanin Satthatthotum Thaeva Ekkaalatthotum Irangkiyavar Vanthitum Naal Nerungkida Thooymaiyaavom - Naamum 2. Maritthavarkal Uyirudanezhunthu Makibanudan Varum Naal Manavaalanai Ethirkontu Poy Maruroobamaakituvom - Naamum 3. Thirudanaip Pol Avar Varukindrathaal Theeviram Vizhitthiruppom Thinam Jepitthu Vaedhatthaiyum Thiyaanitthu Aayatthamaavom - Naamum 4. Maegatthil Naam Avarudan Paranthu Matthiyavaanatthilae Makimaiyin Raajan Aesuvudan Makizhvudan Irunthituvom - Naamum