பாடல் #35295
அன்பு உருவான எங்கள்
🔤 Anpu Uruvaana Enggal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு உருவான எங்கள் ராஜாதிராஜன் அன்னைமரி பாலனாக புவியில் வந்தார் அரண்மனை இல்லை மாளிகையுமில்லை பரனேசு தவழ்ந்திட பஞ்சனையுமில்லை 1. நரிகளுக்கோர் இங்கு குழிகளும் உண்டு பறவைகட்கோர் இங்கு கூடுகள் உண்டு நாயகனாம் ஏசு தன் தலை சாய்க்க நானிலத்தின் மீதில் சிறு இடமில்லை 2. அதிசயமாம் அது அவர் நாமமாமே ஆலோசனை கர்த்தர் என்னென்றுமாமே வல்லமையின் தேவன் நித்தியப் பிதாவே சமாதான ராஜன் அவணியில் வந்தார் 3. மாட்டடையில் அன்று மன்னாதி மன்னன் மாந்தருக்காய் ஏழ்மையாய் பிறந்தாரே மகத்துவ தேவன் பிறந்திட இன்று மகிழ்வுடன் உள்ளம் திறந்தளிப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Uruvaana Enggal Raajaathiraajan Annaimari Paalanaaga Puviyil Vanthaar Aranmanai Illai Maalikaiyumillai Paranaesu Thavazhnthida Panjjanaiyumillai 1. Narigalukkor Ingku Kuzhigalum Untu Paravaigatkor Ingku Kootugal Untu Naayakanaam Aesu Than Thalai Saaykka Naanilatthin Meethil Siru Idamillai 2. Athisayamaam Athu Avar Naamamaamae Aalosanai Kartthar Ennenrumaamae Vallamaiyin Devan Nitthiyap Pithaavae Samaathaana Raajan Avaniyil Vanthaar 3. Maattataiyil Anru Mannaathi Mannan Maandharukkaay Aezhmaiyaay Piranthaarae Makatthuva Devan Piranthida Inru Makizhvudan Ullam Thirandhalippomae