பாடல் #35289
என்னை மறவாத
🔤 Ennai Maravaadha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை மறவாத தெய்வமே எனக்காய் ஏழ்மைக் கோலமே ஏற்ற எனதன்புச் செல்வமே ஏசுவே எந்தன் சொந்தமே 1. பாவ இருள் நீக்க ஜீவ ஒளியான தேவனே எந்தன் ஜீவனே பாதை அறியாத பேதை எனை மீட்க பாசமுடன் வந்த பாலனே 2. மேதைகள் வாழ்த்தும் மேய்ப்பர்கள் போற்றும் நாதனே ஏசு ராஜனே ஆதரை மீதில் ஆறுதல் அருள அன்புடன் வந்த சீலனே 3. கன்னிமரியாளின் அன்புமகனாக மண்ணில் உருவான தங்கமே கண்ணின் மணிபோல என்னைக் காப்பாற்ற கருணை வடிவான தஞ்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Maravaadha Theyvamae Enakkaay Aezhmaik Kolamae Aertra Enathanpuch Selvamae Aesuvae Endhan Sondhamae 1. Paava Irul Neekka Jeeva Oliyaana Devanae Endhan Jeevanae Paathai Ariyaadha Paethai Enai Meetka Paasamudan Vandha Paalanae 2. Maethaigal Vaazhtthum Maeypparkal Porrum Naadhanae Aesu Raajanae Aadharai Meethil Aarudhal Arula Anpudan Vandha Seelanae 3. Kannimariyaalin Anpumakanaaga Mannil Uruvaana Thanggamae Kannin Manipola Ennaik Kaappaartra Karunai Vativaana Thanjjamae