பாடல் #35275
பாவ மனுஷனை மீட்க
🔤 Paava Manushanai Meetka
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவ மனுஷனை மீட்க வந்தவரே பாசமுள்ள எங்கள் ராசாவே - உம்மை பாடுவதற்கு ஆயிரம் நாவுகள் போதாது - இந்த பாழும் உலகிலே வாழும் எங்களுக்காய் தாழ்மையுடன் வந்த ராசாவே - உம்மை போற்றிடவே பதினாயிரம் நாவுகள் போதாது 1. ஞானிகள் யாவருமே அந்த முன்னனை வந்திடவே காணிக்கை யாவையுமே தந்து உம்மையே வாழ்த்திடவே வானத்து தூதருமே நீர்வந்ததை சொல்லிடவே கானங்கள் பாடியும்மை அங்கு யாவரும் போற்றிடவே 2. மாமரி பாலகனாம் உந்தன் பாத மலர் பணிய மேய்ப்பர்கள் ஆவலுடன் நெஞ்சில் ஆனந்தமும் நிறைய ஏழைக்கு வாழ்வளிக்க சிறு ஏழையை போல வந்த ஏசெனும் ராசாவே உம்மை வாழ்த்தி வணங்கினரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paava Manushanai Meetka Vandhavarae Paasamulla Enggal Raasaavae - Ummai Paatuvatharku Aayiram Naavugal Pothaathu - Indha Paazhum Ulakilae Vaazhum Enggalukkaay Thaazhmaiyudan Vandha Raasaavae - Ummai Porridavae Pathinaayiram Naavugal Pothaathu 1. Njaanigal Yaavarumae Andha Munnanai Vanthidavae Kaanikkai Yaavaiyumae Thanthu Ummaiyae Vaazhtthidavae Vaanatthu Thoodharumae Neervandhathai Sollidavae Kaananggal Paatiyummai Angku Yaavarum Porridavae 2. Maamari Paalakanaam Undhan Paadha Malar Paniya Maeypparkal Aavaludan Nenjsil Aanandhamum Niraiya Aezhaikku Vaazhvalikka Siru Aezhaiyai Pola Vandha Aesenum Raasaavae Ummai Vaazhtthi Vanangkinarae