பாடல் #35272
கர்த்தருக்கு உன் வழியை
🔤 Karttharukku Un Vazhiyai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு உன் வழியை ஒப்புவித்து முழுமனதாய் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருந்தால் காரியம் வாய்த்திட செய்திடுவார் 1. எத்தனையோ வழியில் நீ நடந்தாலும் அத்தனையும் பலன்தருவதுண்டோ? சத்திய வழியினில் நீ நடந்தால் (2) நித்தய ஜீவனை கண்டடைவாய் (2) 2. கர்த்தருக்கு நீயும் காத்திருந்து கருத்துடன் அவர் வழியை கைக்கொள்வதால் பூமியை சுதந்திரமாக்கிடுவாய் பொற்பரன் தானுன்னை உயர்த்திடுவார் 3. பார்வைக்கு செம்மையாய் தோன்றுகின்ற பாவத்தின் வழியோ மரணவழி பரிசுத்த வழியினில் வந்திடுவாய் பரமனின் ராஜ்யம் சேர்ந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Un Vazhiyai Oppuvitthu Muzhumanathaay Kartthar Mael Nampikkai Vaitthirunthaal Kaariyam Vaaytthida Seythituvaar 1. Etthanaiyo Vazhiyil Nee Natanthaalum Atthanaiyum Palantharuvathunto? Satthiya Vazhiyinil Nee Natanthaal (2) Nitthaya Jeevanai Kandataivaay (2) 2. Karttharukku Neeyum Kaatthirunthu Karutthudan Avar Vazhiyai Kaikkolvathaal Poomiyai Sudhanthiramaakkituvaay Porparan Thaanunnai Uyartthituvaar 3. Paarvaikku Semmaiyaay Thonrukindra Paavatthin Vazhiyo Maranavazhi Parisuttha Vazhiyinil Vanthituvaay Paramanin Raajyam Saernthituvaay