பாடல் #35271
கன்மலையாகிய கர்த்தாவே
🔤 Kanmalaiyaakiya Kartthaavae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலையாகிய கர்த்தாவே உமை நான் கண்ணீருடன் அழைக்கும் நேரத்திலே - நீர் கேளாதவர் போல மவுனமாயிருந்தால் மீளாமலே மரண குழியில் இறங்குகின்ற மாந்தருக்கு நான் ஒப்பாவேன் 1. நானும்மை நோக்கியே சத்தமிடுவேன் - தூய சந்நிதியின் நேராய் கையெடுப்பேன் விண்ணப்பங்களின் சத்தம் கேட்டருளும் என்னை மீட்டருளும் 2. என் பெலனே எந்தன் கேடகமே - என்றும் என் இதயம் உமை நம்பிடுமே உந்தன் சகாயத்தைப் பெற்றுக் கொண்டேன் எந்தன் பாட்டால் உம்மை துதித்திடுவேன் 3. நீர் அபிஷேகித்தவன் நானன்றோ - என்றும் என் அரணான அடைக்கலமே இரட்சித்து போஷித்து ஆசீர்வதியும் இரக்கத்தின் கரத்தாலே நீர் உயர்த்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyaakiya Kartthaavae Umai Naan Kanneerudan Azhaikkum Naeratthilae - Neer Kaelaadhavar Pola Mavunamaayirunthaal Meelaamalae Marana Kuzhiyil Irangkukindra Maandharukku Naan Oppaavaen 1. Naanummai Nokkiyae Satthamituvaen - Thooya Sannithiyin Naeraay Kaiyetuppaen Vinnappanggalin Sattham Kaettarulum Ennai Meettarulum 2. En Pelanae Endhan Kaedakamae - Enrum En Idhayam Umai Nampitumae Undhan Sakaayatthaip Perruk Kontaen Endhan Paattaal Ummai Thuthitthituvaen 3. Neer Apishaekitthavan Naananro - Enrum En Aranaana Ataikkalamae Iratsitthu Poshitthu Aaseervathiyum Irakkatthin Karatthaalae Neer Uyartthum