பாடல் #35270
நான் பயந்து நடுங்கும்
🔤 Naan Payanthu Natungkum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பயந்து நடுங்கும் போதெல்லாம் பயப்படாதே என்று சொல்லி தேற்றுவார் நான் திகைத்து சோரும் போதெல்லாம் திகையாதே என்று சொல்லி ஆற்றுவார் நான் அழுது புலம்பும் போதெல்லாம் அருகில் வந்து கண்ணீரை மாற்றுவார் நான் கலங்கி தவிக்கும் போதெல்லாம் கலங்காதே என்று கரம் நீட்டுவார் 1. புயல்போல் எதிர்ப்புகள் வரும் போதும் - தேவன் பெலனாகி நின்றென்னை தாங்குவார் மலை போல சோதனை வரும்போது - தேவன் பனிபோலவே யாவையும் மாற்றுவார் துயரென்னும் வெள்ளங்கள் அலைமோதினாலும் துணையாக நின்றென்னை தேற்றுவார் சிலவேளை பெலவீனம் எனை தாக்கினாலும் சோராமல் என் நெஞ்சை ஆற்றுவார் - அவர் 2. தாவீதைப் போல் நானும் தடுமாறும் போதும் தவறாமல் எனைதூக்கி நிறுத்துவார் யோனாவைப்போல் நானும் வழி மாறும்போது என்னை மீட்டு கரை சேர்த்து நேசிப்பார் காணாத ஆடாக நான் மாறினாலும் கனிவோடு எனைதேடி வாடுவார் வீணான உலகாசையாலே வீழ்ந்தாலும் வினையாவும் மன்னித்து மாற்றுவார் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Payanthu Natungkum Pothellaam Payappataathae Enru Solli Thaerruvaar Naan Thikaitthu Sorum Pothellaam Thikaiyaathae Enru Solli Aarruvaar Naan Azhuthu Pulampum Pothellaam Arukil Vanthu Kanneerai Maarruvaar Naan Kalangki Thavikkum Pothellaam Kalangkaathae Enru Karam Neettuvaar 1. Puyalpol Ethirppugal Varum Pothum - Devan Pelanaaki Ninrennai Thaangkuvaar Malai Pola Sodhanai Varumpothu - Devan Panipolavae Yaavaiyum Maarruvaar Thuyarennum Vellanggal Alaimothinaalum Thunaiyaaga Ninrennai Thaerruvaar Silavaelai Pelaveenam Enai Thaakkinaalum Soraamal En Nenjsai Aarruvaar - Avar 2. Thaaveethaip Pol Naanum Thatumaarum Pothum Thavaraamal Enaithookki Nirutthuvaar Yonaavaippol Naanum Vazhi Maarumpothu Ennai Meettu Karai Saertthu Naesippaar Kaanaadha Aataaga Naan Maarinaalum Kanivotu Enaithaeti Vaatuvaar Veenaana Ulakaasaiyaalae Veezhnthaalum Vinaiyaavum Mannitthu Maarruvaar - En