பாடல் #35269
என் நெஞ்சமே எந்நாளும்
🔤 En Nenjjamae Ennaalum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நெஞ்சமே எந்நாளும் நன்மைகள் செய்தவரை இந்நாளில் ஏனோ பிரிந்துவிட்டாய் உன்னால் தான் உபத்திரவம் அடைந்தவர் அவரென்பதை ஒரு நொடி பொழுதினில் மறந்துவிட்டாய் 1. கரம்பிடித்தே வழி நடத்திடவே கனிவோடு அழைத்தவர் அவரல்லவோ கவலைகள் பாரங்கள் யாவையும் நீக்கி கண்ணீர் துடைத்தவர் அவரல்லவா (என் நெஞ்சமே) 2. சோதனை சூழ்ந்திடும் நேரங்களில் சோராமல் காத்தவர் அவரல்லவா வேதனை வியாகுலம் யாவையும் நீக்கி ஆதரவளித்தவர் அவரல்லவா (என் நெஞ்சமே) 3. மனிதர்கள் கைவிட்ட நேரங்களில் மகனே என்றழைத்தவர் அவரல்லவா மடிந்திட வேண்டிய உனை தூக்கி எடுத்து மார்போடு அணைத்தவர் அவரல்லவா (என் நெஞ்சமே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nenjjamae Ennaalum Nanmaigal Seythavarai Innaalil Aeno Pirinthuvittaay Unnaal Thaan Ubatthiravam Ataindhavar Avarenbathai Oru Noti Pozhuthinil Maranthuvittaay 1. Karampititthae Vazhi Natatthidavae Kanivotu Azhaitthavar Avarallavo Kavalaigal Paaranggal Yaavaiyum Neekki Kanneer Thutaitthavar Avarallavaa (en Nenjjamae) 2. Sodhanai Soozhnthitum Naeranggalil Soraamal Kaatthavar Avarallavaa Vaedhanai Viyaakulam Yaavaiyum Neekki Aadharavalitthavar Avarallavaa (en Nenjjamae) 3. Manidharkal Kaivitta Naeranggalil Makanae Endrazhaitthavar Avarallavaa Matinthida Vaentiya Unai Thookki Etutthu Maarpotu Anaitthavar Avarallavaa (en Nenjjamae)