பாடல் #35268
என் மன பாரங்கள்
🔤 En Mana Paaranggal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மன பாரங்கள் யாரிடம் சொல்வேன் ஏசுவே இறங்கிடமாட்டீரோ ஏழை என் ஜெபத்தை நீர் கேளாமல் போனால் என் நிலை என்னாகும் எனதையனே 1. உன்னை விட்டு விலகுவதில்லை - பூவில் உன்னை என்றும் கை விடுவதில்லை என்றுரைத்த தேவன் நீரல்லவோ என்றும் உந்தன் வார்த்தை மெய்யல்லவோ 2. பெயர் சொல்லி அழைத்தவர் நீரே - உள்ளங் கையிலென்னை வரைந்தவர் நீரே தந்தை தாயுமென்னை மறந்திட நேரும் எந்த நாளும் எனை நீர் மறந்திடலாமோ 3. நடுக்கடல் புயல்வீசும் நேரம் கண்டு நடுங்கிடும் என்னை இன்று பாரும் திகையாதே என்று தேற்றிட வாரும் தெய்வமே நீர் எந்தன் கவலையை தீரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Mana Paaranggal Yaaridam Solvaen Aesuvae Irangkidamaatteero Aezhai En Jebatthai Neer Kaelaamal Ponaal En Nilai Ennaakum Enathaiyanae 1. Unnai Vittu Vilakuvathillai - Poovil Unnai Enrum Kai Vituvathillai Enruraittha Devan Neerallavo Enrum Undhan Vaartthai Meyyallavo 2. Peyar Solli Azhaitthavar Neerae - Ullang Kaiyilennai Varaindhavar Neerae Thanthai Thaayumennai Maranthida Naerum Endha Naalum Enai Neer Maranthidalaamo 3. Natukkatal Puyalveesum Naeram Kantu Natungkitum Ennai Inru Paarum Thikaiyaathae Enru Thaerrida Vaarum Theyvamae Neer Endhan Kavalaiyai Theerum