பாடல் #35265
இனி நீ அழுது கொண்டிராய்
🔤 Ini Nee Azhuthu Kontiraay
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனி நீ அழுது கொண்டிராய் நீ கூப்பிடும் சத்ததிற்கு அவர் உருக்கமாய் இறங்கி அதைக் கேட்டவுடன் மறு உத்தரவு அன்பாய் அருளுவார் - தேவன் 1. அழுகையின் பள்ளத்தாக்கை நீ கடந்த போதும் கழுகு போல் உனை தேவன் சுமந்ததை மறவாதே கைவிடாமல் தாங்குகின்ற கரம் பிடித்து நடத்துகின்ற காக்கும் தேவன் உனக்குண்டு கலங்குவதேன் 2. கண்ணீரைத் துடைக்கின்ற கர்த்தர் உந்தன் சொந்தம் கவலையை அவர் மீது வைத்து விடு திகையாதே கண்ணின் மணிபோல் காக்கும் கஷ்டம் யாவையும் நீக்கும் கர்த்தர் உண்டு நீ இன்னும் கலங்குவதேன் 3. தாயின் கருவில் உன்னை தெரிந்தெடுத்த தேவன் தாசன் உன்னைப் பேர்சொல்லி அழைத்ததை மறவாதே தாயுன்னை மறந்தாலும் தந்தை உன்னை பிரிந்தாலும் தேவன் உன்னை மறப்பாரோ கலங்குவதேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ini Nee Azhuthu Kontiraay Nee Kooppitum Satthathirku Avar Urukkamaay Irangki Athaik Kaettavudan Maru Uttharavu Anpaay Aruluvaar - Devan 1. Azhukaiyin Pallatthaakkai Nee Katandha Pothum Kazhuku Pol Unai Devan Sumandhathai Maravaathae Kaivitaamal Thaangkukindra Karam Pititthu Natatthukindra Kaakkum Devan Unakkuntu Kalangkuvathaen 2. Kanneeraith Thutaikkindra Kartthar Undhan Sondham Kavalaiyai Avar Meethu Vaitthu Vitu Thikaiyaathae Kannin Manipol Kaakkum Kashtam Yaavaiyum Neekkum Kartthar Untu Nee Innum Kalangkuvathaen 3. Thaayin Karuvil Unnai Therinthetuttha Devan Thaasan Unnaip Paersolli Azhaitthathai Maravaathae Thaayunnai Maranthaalum Thanthai Unnai Pirinthaalum Devan Unnai Marappaaro Kalangkuvathaen