பாடல் #35262
நீ எந்தன் பார்வைக்கு
🔤 Nee Endhan Paarvaikku
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ எந்தன் பார்வைக்கு அருமையானவன் இன்று நீ கனம் அடைந்தாய் நான் உன்னை சிநேகித்தேன் என்று என் தேவனே அன்புடன் வாக்களித்தார் அல்லேலூயா அல்லேலூயா (4) 1. தாயுன்னை மறப்பினும் நான் மறவேனே தாங்கி சுமந்துன்னை தப்புவிப்பேனே தயவாய் ஏந்திடுவேன் - என்று தயாபரன் வாக்களித்தார் 2. உன்னை என் உள்ளங்கையில் நான் வரைந்தேனே உன் கரம் பிடித்தென்றும் நடத்திடுவேனே உன்னை நான் மீட்டுக் கொண்டேன் - என்று உன்னதர் வாக்களித்தார் 3. நான் உன்னை பேர்சொல்லி அழைத்து விட்டேனே நானிலத்தில் உன்னை தெரிந்து கொண்டேனே நீ என்றும் என்னுடையவன் - என்று நேசரே வாக்களித்தார் 4. ஆயிரம் ஆயிரம் வாக்குகள் இதுபோல் ஆண்டவர் ஏசுவே எனக்களித்ததினால் ஆவியில் நிறைந்தவரை - என்றும் அன்புடன் பாடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Endhan Paarvaikku Arumaiyaanavan Inru Nee Kanam Atainthaay Naan Unnai Sinaekitthaen Enru En Devanae Anpudan Vaakkalitthaar Allaelooyaa Allaelooyaa (4) 1. Thaayunnai Marappinum Naan Maravaenae Thaangki Sumanthunnai Thappuvippaenae Thayavaay Aenthituvaen - Enru Thayaabaran Vaakkalitthaar 2. Unnai En Ullangkaiyil Naan Varainthaenae Un Karam Pititthenrum Natatthituvaenae Unnai Naan Meettuk Kontaen - Enru Unnathar Vaakkalitthaar 3. Naan Unnai Paersolli Azhaitthu Vittaenae Naanilatthil Unnai Therinthu Kontaenae Nee Enrum Ennutaiyavan - Enru Naesarae Vaakkalitthaar 4. Aayiram Aayiram Vaakkugal Ithupol Aandavar Aesuvae Enakkalitthathinaal Aaviyil Niraindhavarai - Enrum Anpudan Paatituvaen