பாடல் #35260
கண்ணின் மணிபோல
🔤 Kannin Manipola
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணின் மணிபோல என்னை இதுவரையில் காத்தவர் நீரே கர்த்தாவே வாழ்க வாழ்க என்றும் வாழ்க என்றும் வல்லமை தேவனே வாழ்க வாழ்க என்றும் வாழ்க - எங்கள் வல்லமை தேவனே வாழ்க 1. தகப்பன் தன் பிள்ளையினை தோளின் மேல் சுமந்தது போல் இதுவரை என்னை சுமந்தவர் நீரே இணையில்லா தேவனே வாழ்க 2. தாயவள் பிள்ளையினை தானவள் மறந்திடினும் தூயவரே நீர் என்னை ஒருபோதும் தரணியில் மறந்ததுமில்லை 3. உலகோர் மறந்திடலாம் உறவுகள் மறந்திடலாம் உன்னதர் நீரோ என்னையும் மறப்பதுமில்லை 4. கண்ணிமை நேரத்திலே மன்னவர் நீர்வரும் நாள் உம்மைப்போல் என்னை மறுரூபமாக்கி உம்முடன் அழைத்து செல்வீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannin Manipola Ennai Ithuvaraiyil Kaatthavar Neerae Kartthaavae Vaazhka Vaazhka Enrum Vaazhka Enrum Vallamai Devanae Vaazhka Vaazhka Enrum Vaazhka - Enggal Vallamai Devanae Vaazhka 1. Thakappan Than Pillaiyinai Tholin Mael Sumandhathu Pol Ithuvarai Ennai Sumandhavar Neerae Inaiyillaa Devanae Vaazhka 2. Thaayaval Pillaiyinai Thaanaval Maranthitinum Thooyavarae Neer Ennai Orupothum Tharaniyil Marandhathumillai 3. Ulakor Maranthidalaam Uravugal Maranthidalaam Unnathar Neero Ennaiyum Marappathumillai 4. Kannimai Naeratthilae Mannavar Neervarum Naal Ummaippol Ennai Maruroobamaakki Ummudan Azhaitthu Selveerae