பாடல் #35259
நிச்சயமாகவே நான் உன்னை
🔤 Nicchayamaagavae Naan Unnai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவேப் பெருகப் பண்ணுவேன் என்று வாக்குரைத்த என்றும் வாக்கு மாறா எங்கள் தேவனே ஸ்தோத்திரம் 1. எங்கள் தேவனே நீர் அருளும் ஆசீர்வாதமே என்றும் ஐசுவரியத்தை தரும் என்பது வேதமே அதனுடன் வேதனையைக் கூட்டிட மாட்டீர் அவணியில் எம்மை என்றும் கைவிடமாட்டீர் 2. இந்த பூமியில் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே எந்த வேளையும் உமக்கதுவே பிரியமே காத்திடும் தேவா நீர் உறங்குவதில்லை கருணையின் நாதா நீர் தூங்குவதில்லை 3. உம்மை நம்பினோர் என்றும் வெட்கம் அடைந்ததில்லையே உம்மை ஏற்றவர் ஏழையானதில்லையே பூமியும் அதின் நிறைவும் பொன் வெள்ளியுமே உமக்கே சொந்தம் நீர் எங்கள் தந்தையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaagavae Naan Unnai Aaseervathikkavae Aaseervathitthu Unnaip Perugavaep Perugap Pannuvaen Enru Vaakkuraittha Enrum Vaakku Maaraa Enggal Devanae Sthotthiram 1. Enggal Devanae Neer Arulum Aaseervaadhamae Enrum Aisuvariyatthai Tharum Enbathu Vaedhamae Adhanudan Vaedhanaiyaik Koottida Maatteer Avaniyil Emmai Enrum Kaividamaatteer 2. Indha Poomiyil Isravaelai Aaseervathippathae Endha Vaelaiyum Umakkathuvae Piriyamae Kaatthitum Thaevaa Neer Urangkuvathillai Karunaiyin Naathaa Neer Thoongkuvathillai 3. Ummai Nampinor Enrum Vetkam Ataindhathillaiyae Ummai Aertravar Aezhaiyaanathillaiyae Poomiyum Athin Niraivum Pon Velliyumae Umakkae Sondham Neer Enggal Thanthaiyae