பாடல் #35258
உன்னை எந்தன் உள்ளங்கைகளில்
🔤 Unnai Endhan Ullangkaigalil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை எந்தன் உள்ளங்கைகளில் உண்மையாக வரைந்திருக்கிறேன் உன் மதில்கள் என்றும் என் முன் இருக்கின்றதே என தேவன் வாக்குரைத்தார் அந்த தேவன் வாக்கு மாறார் 1. தாயின் கருவில் நான் உருவாகுமுன்னே தூயவர் எனையன்று தெரிந்துக் கொண்டதால் தாயினும் மேலாக அன்பென்னில் காட்டி தயவுடன் இந்நாள் வரை வழி நடத்தினார் அலேலூயா, அலேலூயா (2) 2. அவரது கரத்தில் இருக்கின்றதாலே அற்புதம் என்வாழ்வில் நடக்கின்றதே அவரென் பெலனாக இருக்கின்றதாலே அவணியில் ஜெயம் என்னை சேர்கின்றதே அலேலூயா, அலேலூயா (2) 3. வருஷங்கள் தோறும் என் அன்பான தேவன் வாக்குகள் எனக்கீந்து தேற்றுகின்றதால் வழிகளில் இடறாமல் அவரோடு நடந்து வாழ்நாள் முழுதும் அவர் சேவை செய்வேன் அல்லேலூயா, அல்லேலூயா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Endhan Ullangkaigalil Unmaiyaaga Varainthirukkiraen Un Mathilkal Enrum En Mun Irukkindrathae Ena Devan Vaakkuraitthaar Andha Devan Vaakku Maaraar 1. Thaayin Karuvil Naan Uruvaakumunnae Thooyavar Enaiyanru Therinthuk Kondathaal Thaayinum Maelaaga Anpennil Kaatti Thayavudan Innaal Varai Vazhi Natatthinaar Alaelooyaa, Alaelooyaa (2) 2. Avarathu Karatthil Irukkindrathaalae Arpudham Envaazhvil Natakkindrathae Avaren Pelanaaga Irukkindrathaalae Avaniyil Jeyam Ennai Saerkindrathae Alaelooyaa, Alaelooyaa (2) 3. Varushanggal Thorum En Anpaana Devan Vaakkugal Enakkeenthu Thaerrukindrathaal Vazhigalil Idaraamal Avarotu Natanthu Vaazhnaal Muzhuthum Avar Saevai Seyvaen Allaelooyaa, Allaelooyaa (2)