பாடல் #35255
ஐயா வாங்க அம்மா வாங்க
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
ஐயா வாங்க அம்மா வாங்க நீங்க எல்லாரும் வந்து பாருங்க - இயேசு ராஜாவ பத்தி நாங்க சொல்றத வந்து கேளுங்க 1. பாவத்த போக்கவும் சாபத்தை நீக்கவும் பாரினிலே வந்தவராம் - நம்மை பரிசுத்த மாக்குபவராம் 2. தாயைப்போல் நேசிப்பார் தந்தைப்போல் போஷிப்பார் தத்தளிக்கும் மாந்தரையும் - அவர் தேற்றி என்றும் நடத்திடுவார் 3. இன்னலை நீக்கிட இன்பத்தை தந்திட அன்புடனே வந்தவராம் - நமக்காய் தன்னுயிரை ஈந்தவராம் 4. கண்ணீரை நீக்கவும் கவலையை மாற்றவும் கனிவுடன் வந்தவராம் - பூவில் கருணையாய் வாழ்ந்தவராம் 5. நாமெல்லாம் பூமியில் இரட்சிப்பை பெற்றிட நாதனவர் இரத்தத்தையே சிந்தி நானிலத்தில் ஜீவனைத் தந்தார்