பாடல் #35254
மனிதனை தேவன் படைத்ததை
🔤 Manidhanai Devan Pataitthathai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதனை தேவன் படைத்ததை எண்ணி மனஸ்தாபம் அடைந்தாரே 1. அவரது சாயலாய் அவரது ரூபமாய் அழகுடன் மனிதனை படைத்தாரே படைத்தவரை அவன் மறந்ததினால் உள்ளம் உடைந்தவராய் அவர் தவித்தாரே 2. பாரினில் யாவையும் ஏற்படுத்தி - மனிதன் பாங்குடன் ஆண்டிட நினைத்தாரே பாவத்தை மனிதன் செய்ததினால் - அன்று பரமனே வேதனை அடைந்தாரே 3. தூதர்களில் சிலர் கீழ்படியாததால் தேவனவர் சொந்த சாயலைப் போல் மாந்தரை படைத்து மனமகிழும் வேளை சத்துரு அவர்களை கெடுத்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhanai Devan Pataitthathai Enni Manasthaabam Atainthaarae 1. Avarathu Saayalaay Avarathu Roobamaay Azhakudan Manidhanai Pataitthaarae Pataitthavarai Avan Marandhathinaal Ullam Utaindhavaraay Avar Thavitthaarae 2. Paarinil Yaavaiyum Aerpatutthi - Manidhan Paangkudan Aantida Ninaitthaarae Paavatthai Manidhan Seythathinaal - Anru Paramanae Vaedhanai Atainthaarae 3. Thoodharkalil Silar Keezhpatiyaadhathaal Devanavar Sondha Saayalaip Pol Maandharai Pataitthu Manamakizhum Vaelai Satthuru Avarkalai Ketutthaanae