பாடல் #35244
கன்மலையே எந்தன்
🔤 Kanmalaiyae Endhan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலையே எந்தன் புகலிடமே கண்ணின் மணி போல் காக்கும் அடைக்கலமே உன்னத தேவா உம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே என் சொந்தம் நீரே ஸாநிப காகம பநிஸரி கரிஸா ஸாநிப காகம பகமரி கரிஸா 1. தாய்தன் பாலகனை மறந்திடலாகுமோ தாய் மறந்தாலும் நான் மறவேன் என்று தயவுடன் நீர் உரைத்த வாக்கு மாறுமோ வானமும் பூமி ஒழிந்தாலும் - உந்தன் வார்த்தைகள் என்றும் ஒழிந்து போவதில்லை 2. தந்தை தன் மகனை சுமப்பது போலவே இதுவரை நடந்த வழிகளிளெல்லாம் தோளின் மேல் சுமந்து வந்த எந்தன் தந்தையே மனிதர்கள் என்னை மறந்தாலும் பூவில் மறந்திட மாட்டீர் நீர் என்றும் என்னை 3. உலகத்தின் முடிவுவரை உன்னுடன் இருப்பேன் விலகிடமாட்டேன் கைவிடமாட்டேன் வல்லநல் வாக்கு என்னை தேற்றுகின்றதே உயிர் உள்ள வரையில் உமை மட்டும் பாடி ஊழியம் செய்வேன் உமை நம்பி வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyae Endhan Pugalidamae Kannin Mani Pol Kaakkum Ataikkalamae Unnatha Thaevaa Um Ullangkaiyil Ennai Varaintheerae En Sondham Neerae Saaniba Kaagama Panisari Karisaa Saaniba Kaagama Pakamari Karisaa 1. Thaaythan Paalakanai Maranthidalaakumo Thaay Maranthaalum Naan Maravaen Enru Thayavudan Neer Uraittha Vaakku Maarumo Vaanamum Poomi Ozhinthaalum - Undhan Vaartthaigal Enrum Ozhinthu Povathillai 2. Thanthai Than Makanai Sumappathu Polavae Ithuvarai Natandha Vazhigalilellaam Tholin Mael Sumanthu Vandha Endhan Thanthaiyae Manidharkal Ennai Maranthaalum Poovil Maranthida Maatteer Neer Enrum Ennai 3. Ulakatthin Mutivuvarai Unnudan Iruppaen Vilakidamaattaen Kaividamaattaen Vallanal Vaakku Ennai Thaerrukindrathae Uyir Ulla Varaiyil Umai Mattum Paati Oozhiyam Seyvaen Umai Nampi Vaazhvaen