பாடல் #35240
நான் எனக்கென வாழ்ந்தது
🔤 Naan Enakkena Vaazhndhathu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் எனக்கென வாழ்ந்தது போதும் - இனி இயேசுவுக்காய் வாழவேண்டும் உலகத்தின் வாழ்க்கையே போதும் - புவியில் இயேசுவைப்போல் வாழ வேண்டும் - நான் 1. பாவத்தின் பாரத்தை சுமந்தவனாக பாரினில் நானும் அலைந்ததே போதும் இப்புவி மீதினில் சிலுவையை சுமந்து இயேசுவின் பின் செல்ல வேண்டும் - நான் 2. என் சித்தம் போலவே இகமதில் வாழ்ந்து எல்லையில்லா துயர் அடைந்ததே போதும் அவர் சித்தம் செய்து ஆவியில் நிறைந்து அவர் பணி நான் செய்ய வேண்டும் - நான் 3. மனிதரை நம்பி வாழ்ந்ததினாலே மனமடிவாகி சோர்ந்ததே போதும் புனிதராம் இயேசுவை அனுதினம் நம்பி புதுபெலன் பெற்றோங்க வேண்டும் - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Enakkena Vaazhndhathu Pothum - Ini Yesuvukkaay Vaazhavaentum Ulakatthin Vaazhkkaiyae Pothum - Puviyil Yesuvaippol Vaazha Vaentum - Naan 1. Paavatthin Paaratthai Sumandhavanaaga Paarinil Naanum Alaindhathae Pothum Ippuvi Meethinil Siluvaiyai Sumanthu Yesuvin Pin Sella Vaentum - Naan 2. En Sittham Polavae Igamathil Vaazhnthu Ellaiyillaa Thuyar Ataindhathae Pothum Avar Sittham Seythu Aaviyil Nirainthu Avar Pani Naan Seyya Vaentum - Naan 3. Manidharai Nampi Vaazhndhathinaalae Manamativaaki Sorndhathae Pothum Punidharaam Yesuvai Anuthinam Nampi Puthupelan Perrongga Vaentum - Naan