பாடல் #35235
உம்மாலே கூடாத
🔤 Ummaalae Kootaadha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே கூடாத காரியம் - இந்த உலகினில் ஒன்றுமில்லை உம்மாலே எல்லாமும் கூடுமே - இங்கு உம்மைப்போல் எவருமில்லை நீர் சொல்ல ஆகுமே நீர் கட்டளையிட நிற்குமே 1. கடலினில் சீஷர்கள் - அன்று கதறிடும் வேளையில் காற்றையும் கடலையும் அதட்டினீரே கர்த்தாவே உம்மைப்போல் எவருமில்லை (உம்மாலே) 2. மரியாளின் மார்த்தாளின் - அழு குரலினை கேட்டதும் லாசருவை உயிராக்கினீரே நேசரே உம்மைபோல் எவருமில்லை (உம்மாலே) 3. நாயீனூர் விதவையாம் - அந்த தாயின் மேல் இரக்கத்தால் அவளது மகனையும் எழுப்பனீரே அற்புதர் உம்மைப்போல் எவருமில்லை (உம்மாலே) 4. யவீருவின் மகளையும் - அன்று உயிர் பெறச் செய்தீரே எண்ணற்ற அதிசயம் செய்தவரே ஏசுவே உம்மைபோல் எவருமில்லை (உம்மாலே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Kootaadha Kaariyam - Indha Ulakinil Onrumillai Ummaalae Ellaamum Kootumae - Ingku Ummaippol Evarumillai Neer Solla Aakumae Neer Kattalaiyida Nirkumae 1. Katalinil Seesharkal - Anru Katharitum Vaelaiyil Kaarraiyum Katalaiyum Adhattineerae Kartthaavae Ummaippol Evarumillai (ummaalae) 2. Mariyaalin Maartthaalin - Azhu Kuralinai Kaettathum Laasaruvai Uyiraakkineerae Naesarae Ummaipol Evarumillai (ummaalae) 3. Naayeenoor Vidhavaiyaam - Andha Thaayin Mael Irakkatthaal Avalathu Makanaiyum Ezhuppaneerae Arpudhar Ummaippol Evarumillai (ummaalae) 4. Yaveeruvin Makalaiyum - Anru Uyir Perach Seytheerae Ennartra Athisayam Seythavarae Aesuvae Ummaipol Evarumillai (ummaalae)